இன்னும் சில மாதங்கள் தான்... அறிமுகமாக காத்திருக்கும் முக்கிய பிராண்டுகளின் ஸ்மார்ட் ஃபோன்கள்!

flagship-smartphones-from-major-brands-waiting-to-launch-in-a-few-months
  • Publisher : news18
  • Author : -
  • Last Update : 2024-06-30 18:13:00

ஸ்மார்ட்ஃபோன் மார்க்கெட் உலகம் முழுவதும் எப்போதும் மிகவும் சுறுசுறுப்பாக இருந்து வருகிறது. பல முன்னணி நிறுவனங்களும் மொபைல் யூஸர்களுக்காக பல புதிய மாடல்களை தொடர்ந்து அறிமுகப்படுத்தி வருகின்றனர்.

இந்த சூழலில் நடப்பாண்டின் இரண்டாம் பாதியானது தொழில்நுட்ப மற்றும் மொபைல் ஆர்வலர்களுக்கு சிறந்ததாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில் பல பெரிய நிறுவனங்கள் தங்கள் பிரீமியம் ஃபிளாக்ஷிப் தயாரிப்புகளை அறிமுகப்படுத்த உள்ளன. இன்னும் சில வாரங்கள் அல்லது மாதங்களில் அறிமுகமாக உள்ள பெரிய ஃபிளாக்ஷிப் மொபைல்களின் பட்டியலை இங்கே பார்க்கலாம்…

கூகுள் பிக்சல் 9 மற்றும் பிக்சல் 9 ப்ரோ:

கூகுள் நிறுவனம் தனது பிக்சல் 9 சீரிஸை வரும் ஆகஸ்ட் மாதம் அறிமுகப்படுத்துகிறது. இந்த சீரிஸின் வெளியீடு குறித்த டீஸரை சமீபத்தில் நிறுவனம் ஷேர் செய்திருந்தது. ஆகஸ்ட் 13 அன்று பிக்சல் 9 மற்றும் பிக்சல் 9 ப்ரோ அடங்கிய பிக்சல் 9 சீரிஸ் வெளியாக உள்ளது. ஆன்லைனில் லீக்காகி இருக்கும் இமேஜ்களின்படி வரவிருக்கும் பிக்சல் சீரிஸ் டிவைஸ்கள் மேம்படுத்தப்பட்ட செயல்திறன், சிறந்த கேமராக்கள் மற்றும் அற்புதமான டிசைனை கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த சீரிஸ் ஸ்மார்ட் ஃபோன்களில் டென்சர் ஜி4 ப்ராசஸர் கொடுக்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

ஆப்பிள் ஐபோன் 16 மற்றும் 16 ப்ரோ:

செப்டம்பர் மாதம் எப்போது வரும் என்று ஆப்பிளின் ஐபோன் ஆர்வலர்கள் மிகுந்த ஆவலுடன் காத்திருக்கின்றனர். வழக்கம்போல ஐபோனின் புதிய சீரிஸ் டிவைஸ்கள் வரும் செப்டம்பரில் அறிமுகமாகும் என பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது. ஐபோன் 16 மற்றும் ஐபோன் 16 ப்ரோ உள்ளிட்ட மாடல்கள் அடங்கிய ஐபோன் 16 சீரிஸ் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

வரவிருக்கும் லேட்டஸ்ட் ஐபோன்கள் ஹார்ட்வேர் மற்றும் சாஃப்ட்வேர் அப்டேட்ஸ்களை கொண்டிருக்கும் மற்றும் சமீபத்திய iOS 18 வெர்ஷனில் AI அம்சங்களை கொண்டு இயங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இன்னும் சில மாதங்களில் அறிமுகமாக உள்ள இந்த புதிய ஐபோன் சீரிஸின் சிறப்பம்சங்களில் ஒன்று, ப்ரோ மாடல்கள் Apple Intelligence-ஐ கொண்டிருக்கும், ஆன்-டிவைஸ் மற்றும் பிரைவேட் கிளவுட் AI தொழில்நுட்பங்களை இணைக்கும்.

சாம்சங் கேலக்ஸி இசட் ஃபிளிப் 6 மற்றும் இசட் ஃபோல்ட் 6:

சாம்சங் Z Flip மற்றும் Z Fold சீரிஸ்களின் லேட் வெர்ஷன்களை வரும் ஜூலை 10ஆம் தேதி அறிமுகப்படுத்த உள்ளது. விரைவில் அறிமுகமாகவிருக்கும் Galaxy Z Flip 6 மற்றும் Z Fold 6 ஆகியவை மெல்லியதாகவும், இலகுவாகவும் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஃபோல்டபிள் ஸ்மார்ட்ஃபோன் செக்மென்ட்டில் தனது இருப்பை தக்கவைக்கும் வகையில், சமீபத்திய தொழில்நுட்பங்களுடன் கூடிய ஸ்மார்ட் போன்களை உருவாக்குவதில் சாம்சங் கவனம் செலுத்தியுள்ளது. வரவிருக்கும் இந்த 2 மொபைல்களும் கேலக்ஸி AI திறன்களுடன் OneUI 6.1-ல் இயங்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மோட்டோரோலா ரேஸர் மற்றும் ரேஸர் அல்ட்ரா:

ஃபிளிப் போன் மார்க்கெட்டில் சாம்சங்குடன் போட்டியிட Razr மற்றும் Razr Ultra தயாரிப்புகளுடன் மோட்டோரோலா தயாராக உள்ளது. இந்த ஃபிளிப் போன்கள் சமீபத்தில் சீனாவில் அறிமுகமாகியுள்ளன, மேலும் இவற்றின் உலகளாவிய வெளியீடு இன்னும் சில மாதங்களில் நடக்க வாய்ப்புள்ளது.

Ads
Recent Technology News
Trending News
Recent News
Prev
Next