உ.பியில் கோரம்.. ஆன்மிக நிகழ்ச்சியில் பலர் பலி - யார் இந்த 'போலே பாபா'?

uttar-pradesh-death-toll-in-satsang-crosses-100-in-hathras-stampede-who-is-at-bhole-baba
  • Publisher : news18
  • Author : -
  • Last Update : 2024-07-02 20:34:00

மேற்கு உத்தரபிரதேசத்தில் உள்ள ஒரு புகழ்பெற்ற துறவி சந்த் நாராயண் சாகர் ஹரி. வெள்ளை நிற சூட் மற்றும் டை அணிந்து, பக்தர்களுக்கு ஆன்மீக சொற்பொழிவாற்றுபவர்.

உத்தரப்பிரதேசத்தில் ஹத்ராஸ்-ஏட்டா எல்லையில் இன்று நடைபெற்ற சத்சங் எனும் ஆன்மீக நிகழ்ச்சியின் போது ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 100 பேர் உயிரிழந்தனர். முதற்கட்ட தகவல்களின்படி, சத்சங் `சந்த் போலே பாபாவால்’ நடத்தப்பட்டது. ஹத்ராஸ்-எட்டா எல்லைக்கு அருகில் உள்ள ரதிபன்பூரில் அவரது சொற்பொழிவைக் கேட்க ஏராளமானோர் கூடியிருந்தனர்.

நாராயண் சாகர் ஹரி AKA போலே பாபா யார்?

எட்டா மாவட்டத்தில் உள்ள பகதூர் நகரில் அரசு ரகசிய சேவைத் துறையில் பணிபுரிந்த இவர், ஆன்மீகத்தில் விருப்பம் ஏற்பட்ட 1990 ஆம் ஆண்டு தனது அரசுப் பணியை ராஜினாமா செய்தார். உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த பல முக்கிய தலைவர்கள் பல சந்தர்ப்பங்களில் அவரது மேடையில் காணப்பட்டுள்ளனர்.

ஒரு குருவாக நாராயண் ஹரியின் தனித்துவமான அம்சங்களில் ஒன்று, அவர் காவி உடைகளை அணியாமல், வெள்ளை நிற சூட் மற்றும் டையை விரும்புவதாகும். அவரது மற்ற விருப்பமான உடை குர்தா-பைஜாமா ஆகும். அவர் தனது சொற்பொழிவுகளின் போது, ​​அவர் தனக்கு வழங்கப்படும் நன்கொடைகளில் இருந்து எந்தத் தொகையையும் சேமித்து வைப்பதில்லை என்றும், அதை தனது பக்தர்களுக்காக செலவிடுவதாகவும் கூறுகிறார்.

நாராயண் ஹரி பொதுவாக காவி உடைகளை விட சூட் மற்றும் டை அணிவதையே விரும்புவார். நாராயண் ஹரி தன்னை ஹரியின் சீடர் என்றும் மேற்கு உத்தரபிரதேசத்தில் கணிசமான ஆதரவாளர்களைக் கொண்டுள்ளார் என்றும் கூறுகிறார்.   

இதனிடையே போலே பாபா பங்கேற்ற சத்சங் ஆன்மிக நிகழ்ச்சி நெரிசலில் சிக்கி இதுவரை 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். அவர்களில் பெரும்பாலானோர் பெண்கள் ஆவர். அந்த மத பிரசார கூட்டத்தில் பங்கேற்ற 100-க்கும் மேற்பட்டோர் கூட்டநெரிசலில் சிக்கி மயங்கி விழுந்தனர். அவர்கள் சரக்கு வேன்களில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

உயிரிழந்தவர்களின் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு வெளியே வைக்கப்பட்டுள்ள வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனிடையே, ஹத்ரஸ் அரசு மருத்துவமனையில் சிகிச்சையளிக்க போதிய மருத்துவர்கள் இல்லாததால் உயிரிழப்பு அதிகரிப்பதாக படுகாயம் அடைந்தவர்களின் உறவினர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

Ads
Recent National News
Trending News
Recent News
Prev
Next