ஏஎன்சி கொண்ட போட் ஏர்டோப்ஸ் 131 எலைட்... விலை விவரம்!

heres-the-price-of-boat-airdopes-131-elite-with-active-noise-suppression
  • Publisher : news18
  • Author : -
  • Last Update : 2024-07-01 19:54:00

போட் தனது சமீபத்திய வயர்லெஸ் இயர்பட்களான ஏர்டோப்ஸ் 131 எலைட் (boAt Airdopes 131 Elite) ஏஎன்சியை ரூ.1,499 விலையில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த இயர்பட்களில் 32dB வரை ஆக்டிவ் நாய்ஸ் கேன்சலேஷன் (ANC), டிரான்ஸ்பரன்சி மோட் மற்றும் 60 மணிநேரம் வரை பிளேபேக் டைம் ஆகியவற்றை கொண்டுள்ளது. இந்த போட் ஏர்டோப்ஸ் 131 எலைட் இயர்பட்கள், ஆக்டிவ் பிளாக், ஆக்டிவ் டீல், ஆக்டிவ் ஒயிட் மற்றும் டவுன் ப்ளூ ஆகிய நான்கு வண்ணங்களில் வருகிறது. அவை Flipkart மற்றும் boAt-lifestyle.com இணையதளம் வழியாக ஆன்லைனில் வாங்கலாம்.

ஏர்டோப்ஸ் 131 எலைட் ஏஎன்சி ஆனது 13மிமீ டைனமிக் டிரைவர்களுடன், டீப் பாஸ் ஆகியவை வழங்குகிறது. இந்த போட் ஏர்டோப்ஸ் 131 எலைட்டின் பட்களில் போட் சிக்னேச்சர் சவுண்ட் உட்பட புளூடூத் v5.3 மூலம் இயக்கப்படுகின்றன. கேமிங் மற்றும் ஆக்ஷன் திரைப்பட பிரியர்களுக்காக 65ms வரையிலான அல்ட்ரா லோ லேடண்சிக்கான BEAST மோட்-ஐ கொண்டுள்ளது. பேட்டரியை பொறுத்தவரை, ஒவ்வொரு இயர்பட்டும் கிட்டத்தட்ட 10 மணிநேரம் பிளேபேக் டைம் வழங்குகிறது மற்றும் சார்ஜிங் கேஸைப் பயன்படுத்தி மொத்தம் 60 மணிநேரம் பிளேபேக் டைம் வழங்குகிறது.

சார்ஜிங் கேஸ் உடன் இந்த இயர்பட்களானது 400mAh பேட்டரியை வழங்குகிறது. அதேபோல ஒவ்வொரு இயர்பட்டும் தலா 35mAh பேட்டரியை வழங்குகிறது. இந்த பேட்டரிக்கு டைப்-சி போர்ட் மற்றும் ஏஎஸ்ஏபி ஃபாஸ்ட் சார்ஜிங் (ASAP Fast Charging) சப்போர்ட் வருகிறது. இந்த இயர்பட்கள் IWP (Insta Wake N’ Pair) தொழில்நுட்பத்தை கொண்டுள்ளதால், கேஸைத் திறந்தவுடன் இயர்பட்கள் ஸ்மார்ட்போனுடன் இணைக்கிறது.

ஏர்டோப்ஸ் 131 எலைட் ANC ஆனது தெளிவான குரல் மற்றும் வீடியோ அழைப்புகளுக்கு ஆக்டிவ் நாய்ஸ் கேன்சலேஷன் (ANC) மற்றும் என்விரான்மென்டல் நாய்ஸ் கேன்சலேஷன் (ENC) ஆகியவற்றைக் கொண்டுள்ளது. ஒவ்வொரு இயர்பட்களிலும் உள்ள டச் கன்ட்ரோல் ஆனது யூசர்களை மேனேஜ் மியூசிக், அட்ஜஸ்ட் வால்யூம், ஆன்ஸர் கால்ஸ், கூகுள் அசிஸ்டண்ட் மற்றும் சிரி போன்ற வாய்ஸ் அசிஸ்டன்ட்டை கொண்டுள்ளது. மேலும், மல்டிபாய்ன்ட் கனெக்டிவிட்டி, IPX5 வாட்டர் மற்றும் ஸ்வெட் ரெசிஸ்டன்ட் ஆகியவற்றுடன் வருகிறது.

அம்சங்கள் - விவரக்குறிப்பு

ஆக்டிவ் நாய்ஸ் கேன்சலேஷன் - 32dB வரை பிளேபேக் டைம் - 60 மணிநேரம் வரை டிரைவர்ஸ் - 13மிமீ டைனமிக் புளூடூத் வேர்ஷன் - v5.3 லேடண்சி - 65ms வரை (BEAST மோட்) பேட்டரி (இயர்பட்ஸ்) - ஒவ்வொன்றும் 35mAh பேட்டரி (கேஸ்) - 400mAh பேட்டரி கன்னெக்ஷன் டெக்னாலஜி - IWP (Insta Wake N’ Pair) டச் கன்ட்ரோல் - ஆம் வாய்ஸ் அசிஸ்டன்ட் - கூகுள் அசிஸ்டண்ட், சிரி வாட்டர் ரெசிஸ்டன்ட் - IPX5 வண்ணங்கள் - ஆக்டிவ் பிளாக், ஆக்டிவ் டீல், ஆக்டிவ் ஒயிட், டவுன் ப்ளூ விலை - ரூ.1,499 ஆகும்.

Trending News
Recent News
Prev
Next