தெரியாத காலர்களை அடையாளம் காட்டும் கூகுள் பிக்சல் போனின் Lookup அம்சம்!!!

google-pixel-phones-lookup-feature-identifies-unknown-callers
  • Publisher : news18
  • Author : -
  • Last Update : 2024-07-01 18:52:00

மோசடி காலர்களிடமிருந்து உங்களை காப்பாற்றுவதற்காக கூகுள் தற்போது ஒரு பயனுள்ள அம்சத்தை வெளியிட்டுள்ளது. கூகுள் அதன் pixel சாதனங்களில் “Lookup” என்ற புதிய அம்சத்தை அறிமுகப்படுத்துவதன் மூலம் தேர்டு பார்ட்டி அப்ளிகேஷன்களை நம்பி இருக்காமல் மொபைலில் சேமிக்கப்படாத நபர்களை அடையாளம் காண்பதற்கு யூசர்களை அனுமதிக்கிறது.

இந்த அம்சமானது ஜூன் பிக்சல் ஃபீச்சர் டிராப்-ன் ஒரு பகுதியாக அறிமுகப்படுத்தப்பட்டது. மேலும் இது ஜப்பானில் உள்ள பிக்சல் யூசர்களுக்கு ஆரம்பத்தில் வெளியிடப்பட்டது. தற்போது இந்த அம்சம் பெரும்பாலான பிக்சல் சாதனங்களில் கிடைக்கிறது. மேலும் கூகுள் போன் ஆப் வெர்ஷன் 132 இன் பீட்டாவில் சேர்க்கப்பட்டுள்ளது. எனினும் உலகம் முழுவதும் உள்ள அனைத்து பிக்சல் யூசர்களுக்கும் இந்த அம்சம் எப்போது கிடைக்கப்பெறும் என்பது குறித்த தகவலை இன்னும் கூகுள் வெளியிடவில்லை.

பிக்சல் போன்களில் லுக்அப் அம்சத்தை பயன்படுத்துவது எப்படி?

உங்களுடைய பிக்சல் சாதனத்தில் உள்ள போன் அப்ளிகேஷனை திறக்கவும்.

Recents டேபுக்கு சென்று உங்களுடைய கால் லாகில் உள்ள தெரியாத ஒரு நம்பரை தட்டவும்.

Add to Contact, Message மற்றும் History tabs போன்ற வழக்கமான ஆப்ஷன்களுடன் கூடுதலாக உங்களால் இப்போது “Lookup” என்ற புதிய ஐகானை காண முடியும்.

Lookup ஐகானை கிளிக் செய்யுங்கள்.

இப்போது நீங்கள் தேர்ந்தெடுத்த அந்த அடையாளம் காணப்படாத காலரை அடையாளம் காண்பதற்கான தேடலை உங்களுடைய சாதனம் ஆட்டோமேட்டிக்காக ஆரம்பித்துவிடும்.

இதற்கு முன்பு தெரியாத காலர்களை அடையாளம் காண்பதற்கு Truecaller போன்ற மூன்றாம் தரப்பு அப்ளிகேஷன்களை யூசர்கள் பயன்படுத்த வேண்டிய நிலை இருந்தது. லுக்அப் அம்சம் மூலமாக யூசர்களுக்கு இந்த செயல்முறை மிகவும் எளிமையாக்கப்பட்டு, நேரமும் மிச்சமாகிறது.

இந்த புதிய லுக் அப் அம்சமானது இன்டர்நெட்டில் பொதுவாக பட்டியலிடப்பட்டுள்ள தொழில் சம்பந்தப்பட்ட போன் நம்பர்களை முதன்மையாக அடையாளம் காண்பதற்கு உதவுகிறது.

பிக்சல் சாதனங்களை தவிர்த்து பிற ஆண்ட்ராய்டு சாதனங்களுக்கும் இந்த அம்சத்தை வெளியிடுவதற்கான திட்டங்களை கூகுள் கொண்டுள்ளதா என்பதை தெரிந்து கொள்வதற்கு அனைவருக்கும் ஆவலாக இருக்கிறது. பிக்சல் உட்பட பிக்சல் 6 மற்றும் சமீபத்திய மாடல்களில் இந்த அம்சம் கிடைக்கப்பெறும். லுக் அப் அம்சம் தவிர கூகுள் அதன் போன் அப்ளிகேஷனில் Contacts Ringtone என்ற மற்றொரு அம்சத்தையும் அறிமுகப்படுத்தியுள்ளது.

இதன் மூலமாக யூசர்கள் தங்கள் போனில் சேமிக்கப்பட்டுள்ள கான்டாக்ட் நம்பர்களுக்கு தனித்தனி ரிங்டோன்களை அமைத்துக் கொள்ளலாம். இந்த அம்சம் ஆடியோ எமோஜி ஐகான் கீழ் உள்ள போன் அப்ளிகேஷனின் செட்டிங்ஸ் பிரிவில் கிடைக்கிறது.

Trending News
Recent News
Prev
Next