தளபதி 69 படத்தில் விஜய்க்கு ஜோடியாகும் பிரபல நடிகை யார் தெரியுமா?

cinema-actress-samantha-to-act-as-actor-vijays-pair-in-thalapathy-69-movie
  • Publisher : news18
  • Author : -
  • Last Update : 2024-07-02 22:02:00

வெங்கட் பிரபு இயக்கிவரும் ‘GOAT’ படத்தில் நடித்து வருகிறார் நடிகர் விஜய். முழுவீச்சில் படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு நடந்து வருகிறது. இந்த படத்திற்கு யுவன்ஷாங்கர் ராஜா இசையமைத்துள்ளார். படத்தில் விஜய் இரட்டை வேடத்தில் நடிக்கிறார், விஜயுடன் இந்த படத்தில் நட்சத்திர பட்டாளத்தையே களமிறக்கியுள்ளார் இயக்குனர் வெங்கட் பிரபு. விஜயின் கோட் திரைப்படம் செப்டம்பர் 5 ஆம் தேதி உலகெங்கிலும் வெளியாகவுள்ளது.

அடுத்ததாக தளபதி 69 படத்தில் நடிக்க தயாராகி வருகிறார் விஜய். ஒட்டுமொத்தக விஜய் ரசிகர்கள், திரை பிரபலங்கள் மற்றும் பலரின் கண்களும் தற்போது விஜயின் தளபதி 69 படத்தின் மீதுதான் உள்ளது. இதற்க்கு முக்கிய காரணம் சினிமாவில் விஜய் நடிக்கவிருக்கும் கடைசி படம் தளபதி 69. அதன் பின் தமிழ் சினிமாவை விட்டு முற்றிலும் விலகும் விஜய், தனது தவெக கட்சியின் மூலம் முழு நேர மக்கள் பணியில் ஈடுபடவுள்ளார்.

தளபதி 69 படத்தின் மீதான அனைவரின் எதிர்பார்ப்பும் உச்சக்கட்டத்தில் உள்ளது. விஜயின் கடைசி படத்தை எந்த இயக்குனர் இயக்கப்போகிறார் என்ற கேள்விகள் எழுந்த நிலையில் தற்போது அதற்கான பதில் கிடைத்துள்ளது. விஜய் நடிக்கவுள்ள தளபதி 69 படத்தை பிரபல இயக்குனர் எச். வினோத் இயக்கவுள்ளார், இந்த படத்திற்கு பிரபல இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்கவுள்ளார் என்று கூறப்படுகிறது.

மேலும் தளபதி 69 குறித்த மற்றுமொரு முக்கிய தகவல் தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி, படத்தில் விஜய்க்கு ஜோடியாக பிரபல தமிழ் சினிமா நடிகை சமந்தா நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஏற்கனவே விஜய் சமந்தா காம்பினேஷனில் வெளியான கத்தி, தெறி, மெர்சல் போன்ற மூன்று படங்களும் மாஸ் ஹிட் கொடுத்த படங்கள். தற்போது விஜயின் கடைசி படமான தளபதி 69 படத்தில் மீண்டும் இந்த ஜோடி இணைவதால் இந்த படமும் சூப்பர் டூப்பர்  ஹிட்டாகும் என்று ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.

Trending News
Recent News
Prev
Next