முழுநேர வைல்டுலைப் போட்டோகிராபராக மாறிய பிரபல நடிகை.. யார் தெரியுமா?

cinema-actress-sadha-has-become-a-proffessional-wild-life-photographer
  • Publisher : news18
  • Author : -
  • Last Update : 2024-07-02 21:02:00

2003 ஆம் ஆண்டு ஜெயம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவின் நாயகியாக அறிமுகமானவர் நடிகை சதா.  இந்த படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக இவர் நடித்திருப்பார். நடித்த முதல் படமே சதாவுக்கு ரசிகர்களை குவித்தது, ஹோம்லியான லுக், அசத்தலான நடிப்பு, கவர்ந்திழுக்கும் அழகு என சதா ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். அந்நியன், உன்னாலே உன்னாலே, திருப்பதி, வர்ணஜாலம், எதிரி, ப்ரியசகி போன்ற படங்களில் நடித்து தமிழ் சினிமாவின் முக்கிய நடிகையாக மாறினார் சதா.

பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர்  இயக்கிய அந்நியன் படத்தின் நாயகியாக நடித்த சதாவுக்கு அந்த படம் மிக பெரிய வரவேற்பை பெற்று தந்தது. அதன் பின் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம் என அடுத்தடுத்த படங்களில் கமிட்டான சதா பிசி நடிகையாக வலம் வர தொடங்கினார். இப்படி பிசி நடிகையாக இருந்த சதா சமீப காலமாக தமிழ் சினிமாவின் பக்கம் அவ்வளவாக தலைகாட்டுவதில்லை.. சதானு ஒரு நடிகை இருந்தாங்களே இப்போ என்ன ஆச்சு என்று ரசிகர்கள் கேட்டு வருகின்றனர்.

குறிப்பிட்ட படங்களில் நடித்து வரும் நடிகை சதா, தற்போது தனது முழு கவனத்தையும் வைல்ட்லைப் போட்டோகிராபியின் மீது செலுத்தியுள்ளார். கையில் கேமராவை எடுத்துக்கொண்டு காடுகளுக்கு சென்று சிங்கம், புலி, யானை, மற்றும் பறவைகளின் அழகிய போட்டோ மற்றும் வீடியோக்களை எடுத்து வருகிறார் சதா. தான் எடுக்கும் வீடியோ மற்றும் போட்டோக்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவேற்றி வரும் இவருக்கு ரசிகர்கள் லைக்ஸுகளை குவித்து வருகின்றனர்.

ப்ரொபஷனல் வைல்ட் லைப் போட்டோகிராபராக மாறியுள்ள சதா, காட்டு விலங்குகள், பறவைகளை எடுத்துள்ள மனதை கவரும் வீடியோ மற்றும் புகைப்படங்கள் இணையத்தில் அனைவரின் கவனத்தையும் பெற்று மிகவும் வைரலாகி வருகிறது.

Trending News
Recent News
Prev
Next