எக்ஸ்ட்ரா பேமெண்ட் இல்லாமல் உங்க ஜியோ நம்பரை ரீசார்ஜ் செய்ய செம ஐடியா இருக்கு!!!

you-can-recharge-your-jio-number-without-extra-payment
  • Publisher : news18
  • Author : -
  • Last Update : 2024-07-01 19:43:00

பொதுவாக நாம் GPay, Phonepe போன்ற UPI அப்ளிகேஷன்களை பயன்படுத்தி ரீசார்ஜ் செய்யும்போது, அதற்கு கூடுதலாக 3 ரூபாய் வரை கட்டணங்களை செலுத்த வேண்டியுள்ளது. எனினும் 50 ரூபாய்க்கும் குறைவான தொகையை நீங்கள் ரீசார்ஜ் செய்தால் அதற்கு எந்த ஒரு கூடுதல் கட்டணமும் கிடையாது. இது கன்வினியன்ஸ் கட்டணம் (Convenience) என்று அழைக்கப்படுகிறது. ஒருவேளை உங்களுடைய ஜியோ சிம் கார்டை கூடுதல் கட்டணம் இல்லாமல் ரீசார்ஜ் செய்வதற்கான வழிகளை நீங்கள் தேடிக் கொண்டிருக்கிறீர்கள் என்றால் இந்த பதிவில் அதனை தெரிந்து கொள்வீர்கள்.

கூடுதல் பணம் செலுத்தாமல் உங்களுடைய ஜியோ சிம் கார்டை ரீசார்ஜ் செய்வது எப்படி?

முதலில் பிளே ஸ்டோரை திறந்து கொள்ளுங்கள். அதில் My Jio அப்ளிகேஷன் என்று டைப் செய்து, அதனை டவுன்லோட் செய்து இன்ஸ்டால் செய்யவும்.

இப்போது உங்களுடைய ஜியோ நம்பரை பயன்படுத்தி My Jio அப்ளிகேஷனில் லாகின் செய்யவும். பின்னர் ஹோம் ஸ்கிரீனில் தெரியும் ‘Recharge’ என்ற ஆப்ஷனை கிளிக் செய்யுங்கள்.

கொடுத்திருக்கும் ஆப்ஷன்களில் இருந்து உங்களுக்கு விருப்பமான ஒரு பிளானை தேர்வு செய்யவும். அந்த திட்டத்தை தேர்வு செய்தபிறகு ‘Recharge’ என்பதை கிளிக் செய்தால், பேமெண்ட் பக்கத்திற்கு அனுப்பப்படுவீர்கள்.

இப்போது ‘Pay via UPI ID’ என்ற ஆப்ஷனை தேர்வு செய்து, பின்னர் உங்களுடைய UPI ID-ஐ என்டர் செய்யுங்கள்.

பின்னர் Google Pay அல்லது Phonepe அப்ளிகேஷனை திறக்கவும். இப்போது எந்த ஒரு கூடுதல் கட்டணமும் இல்லாமல் உங்களுடைய டிரான்சாக்ஷனை நீங்கள் நிறைவு செய்யலாம்.

UPI-க்கு பதிலாக நெட் பேங்கிங் அல்லது கிரெடிட்/டெபிட் கார்டு ஆப்ஷனையும் நீங்கள் தேர்வு செய்யலாம். உங்களுக்கு விருப்பமான முறையை பயன்படுத்தி பேமெண்டை நிறைவு செய்யவும்.

இவ்வாறு நீங்கள் UPI அப்ளிகேஷன்களை பயன்படுத்தி, எந்த கன்வினியன்ஸ் கட்டணம் இல்லாமல் ரீசார்ஜ் செய்யலாம். கூடுதலாக ஜியோ ரீசார்ஜ்கள் செய்வதற்கு ஒரு சில டிஜிட்டல் வாலட்டுகள் கேஷ் பேக் அல்லது டிஸ்கவுண்டுகளை வழங்குகின்றன. இதற்கு நீங்கள் Paytm அல்லது Amazon Pay போன்ற வாலட்டுகளில் உள்ள ஆஃபர்கள் பிரிவை சரிபார்க்க வேண்டும். இந்த ஆஃபர்களை பயன்படுத்தி உங்களுடைய ரீசார்ஜ் கட்டணத்தை நீங்கள் குறைக்கலாம் அல்லது கன்வினியன்ஸ் கட்டணத்தை தவிர்க்கலாம்.

ஜியோ நம்பரை ரீசார்ஜ் செய்வதற்கான மற்றொரு வழி அதிகாரப்பூர்வ Jio வெப்சைட்டை பயன்படுத்துவதாகும். இதற்கு நீங்கள் Jio.com என்ற இணையதளத்திற்கு சென்று, அங்குள்ள ‘Recharge’ பிரிவுக்கு செல்ல வேண்டும். உங்களுடைய ஜியோ நம்பரை பயன்படுத்தி லாகின் செய்து உங்களுக்கு விருப்பமான திட்டத்தை தேர்வு செய்தபின் நெட்பேங்கிங் அல்லது கார்டு பேமெண்ட் மூலமாக எந்த ஒரு கூடுதல் பணமும் செலுத்தாமல் ரீசார்ஜை நிறைவு செய்யலாம். அதேபோல பிற சிம் கார்டுகளுக்கும் அந்தந்த அதிகாரப்பூர்வ வெப்சைட்டுகளை பயன்படுத்தி நீங்கள் ரீசார்ஜ் செய்யும்போது கூடுதல் கட்டணங்களை தவிர்க்கலாம்.

Trending News
Recent News
Prev
Next