6,000mAh பேட்டரியுடன் இந்தியாவில் அறிமுகமான Vivo Y58 5ஜி மொபைல்

vivo-y58-5g-mobile-launched-in-india
  • Publisher : news18
  • Author : -
  • Last Update : 2024-07-01 22:01:00

பிரபல சீன ஸ்மார்ட் ஃபோன் தயாரிப்பு நிறுவனமான விவோ சமீபத்தில் இந்தியாவில் Y58 என்ற 5G ஃபோனை அறிமுகப்படுத்தி இருக்கிறது. விவோவின் ஒய்-சீரிஸ் மலிவு விலையில் பல 5ஜி ஸ்மார்ட் போன்களை வாடிக்கையாளர்களுக்கு வழங்கி வருகிறது.

அந்த வகையில் தற்போது அறிமுகமாகி இருக்கும் இந்த புதிய 5G ஃபோன் 2 கலர் ஆப்ஷன்களில் கிடைக்கும் மற்றும் இதில் 50 மெகாபிக்சல் டூயல் ரியர் கேமராக்கள் கொடுக்கப்பட்டுள்ளன. ரூ.20,000க்கும் குறைவான விலையில் நேர்த்தியான விவரக் குறிப்புகளை கொண்டு இந்த மொபைல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

Vivo Y58 5G மொபைலின் விலை

Y58 5G மொபைலானது 8GB ரேம் + 128GB இன்டர்னல் ஸ்டோரேஜ் என சிங்கிள் வேரியன்ட்டில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் விலை ரூ.19,499ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஹிமாலயன் ப்ளூ மற்றும் சுந்தர்பன்ஸ் கிரீன் உள்ளிட்ட 2 கலர் ஆப்ஷன்களில் வழங்கப்படுகிறது. இந்த மொபைல் தற்போது Flipkart, Vivo India e-Store உட்பட மற்ற அனைத்து முக்கிய ரீடெயில் ஸ்டோர்களிலும் விற்பனைக்கு வந்துள்ளது. எஸ்பிஐ, யெஸ் பேங்க், பேங்க் ஆஃப் பரோடா, ஐடிஎஃப்சி மற்றும் இன்டஸ்இன்ட் (IndusInd) பேங்க் கார்டுகளை பயன்படுத்தி இந்த மொபைலை வாங்கும் வாடிக்கையாளர்கள் ரூ.1,500 இன்ஸ்டன்ட் கேஷ்பேக் பெறலாம்.

விவோ-வின் Y58 5G மொபைலின் ஸ்பெசிஃபிகேஷன்கள்…

இந்த டூயல் நானோ சிம் சப்போர்ட் கொண்ட Y58 5G மொபைலானது Funtouch OS 14-ஐ அடிப்படையாகக் கொண்டு Android 14-ல் இயங்குகிறது. 120Hz ரெஃப்ரஷ் ரேட் , 393ppi பிக்சல் டென்சிட்டி மற்றும் 1024nits பீக் பிரைட்னஸை கொண்ட 6.72-இன்ச் ஃபுல்-HD+ LCD ஸ்கிரீனைக் கொண்டுள்ளது இதன் 2.5D ஸ்கிரீனானது TUV Rheinland லோ ப்ளூ லைட் ஐ கேர் சான்றிதழைக் கொண்டுள்ளது. Snapdragon 4 Gen 2 ப்ராசஸரில் இயங்கும் இந்த மொபைலில் மைக்ரோ எஸ்டி கார்டு மூலம் இன்பில்ட் மெமரியை 1TB வரை விரிவாக்கிக் கொள்ள முடியும்.

Vivo Y58 மொபைலானது பின்பக்கத்தில் 50MP பிரைமரி கேமரா மற்றும் 2MP bokeh lens-ஐ கொண்டுள்ளது. செல்ஃபி மற்றும் வீடியோ கால்ஸ்களுக்காக இதில் 8MP ஃப்ரன்ட் கேமரா உள்ளது. இந்த மொபைலில் கொடுக்கப்பட்டிருக்கும் கனெக்டிவிட்டி ஆப்ஷன்களில் GPS, BeiDou, GLONASS, Galileo மற்றும் QZSS ஆகியவை அடங்கும். Vivo Y58 5G மொபைலானது இன்-டிஸ்ப்ளே ஃபிங்ர்-பிரிண்ட் சென்சாரைக் கொண்டுள்ளது மற்றும் டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டென்ஸிற்காக IP64-ரேட்டிங்கை கொண்டுள்ளது.

இதில் டூயல் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் உள்ளன. இந்த மொபைல் 44W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொண்ட 6,000mAh பேட்டரியைக் கொண்டுள்ளது. ஒருமுறை சார்ஜ் செய்தால் 73 மணி நேரம் வரை மியூசிக் பிளேபேக் நேரத்தையும், 23 மணிநேர யூடியூப் வீடியோ பிளேபேக் நேரத்தையும் இந்த பேட்டரி வழங்கும் என்று கூறப்படுகிறது

Trending News
Recent News
Prev
Next