2வது ஹாலோ சுற்றுவட்டப்பாதையில் ஆதித்யா எல்.1 விண்கலம் - இஸ்ரோ வெளியிட்ட தகவல்!

aditya-l1-spaceship-has-successfully-started-traveling-in-the-second-halo-orbit
  • Publisher : news18
  • Author : -
  • Last Update : 2024-07-03 08:20:00

சூரியனை ஆய்வுசெய்வதற்காக அனுப்பப்பட்டுள்ள ஆதித்யா எல்.1 விண்கலம் இரண்டாவது ஹாலோ சுற்றுவட்டப்பாதையில் வெற்றிகரமாக பயணிக்கத் தொடங்கியுள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.

இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோ, சூரியனின் மேற்புற வளிமண்டல அடுக்கை ஆய்வு செய்யவும், சூரியனிலிருந்து வெளிவரும் அயனியாக்கப்பட்ட துகள்களின் தன்மை மற்றும் அளவு குறித்து ஆராயவும் ஆதித்யா எல் 1 என்ற விண்கலத்தை கடந்த ஆண்டு செப்டம்பர் இரண்டாம் தேதி விண்ணில் செலுத்தியது.

இது, பூமியிலிருந்து 15 லட்சம் கிலோ மீட்டர் தொலைவில் உள்ள லாங்ரேஞ்சியன் புள்ளி என அழைக்கப்படும் L1 புள்ளியை ஜனவரி 6-ஆம் தேதி சென்றடைந்து. தற்போது ஆதித்யா எல் 1 விண்கலம் ஹாலோ சுற்றுவட்டப் பாதையில் முதல் சுற்றை நிறைவு செய்துள்ளதாக இஸ்ரோ தெரிவித்து உள்ளது.

இந்த சுற்றுவட்டப் பாதையை நிறைவு செய்ய 178 நாட்களை விண்கலம் எடுத்துக் கொண்டுள்ளதாகவும், தற்போது விண்கலம் இரண்டாவது ஹாலோ ஆர்பிட்டில் தனது பாதையை வெற்றிகரமாக மாற்றி சிறப்பாக பயணித்து வருவதாகவும் இஸ்ரோ தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளது.

Ads
Recent National News
Trending News
Recent News
Prev
Next