சாம்சங் ஸ்மார்ட் போன் யூஸ் பண்றீங்களா.. அப்போ இந்த ஹேப்பி நியூஸ் உங்களுக்கு தான்

flight-and-bus-tickets-can-be-booked-directly-in-samsung-wallet
  • Publisher : news18
  • Author : -
  • Last Update : 2024-07-01 18:46:00

சாம்சங் வாலட் யூசர்கள் இனி பிளாட்ஃபார்ம் மூலமாக ஃபிளைட், பேருந்து, திரைப்படம் மற்றும் ஈவன்ட்களுக்கான டிக்கெட்டுகளை நேரடியாக புக்கிங் செய்யலாம். Paytm-க்கு பின்னணியில் உள்ள One97 Communications லிமிடெட் நிறுவனத்துடன் பார்ட்னர்ஷிப் ஏற்படுத்திக் கொண்டதன் மூலமாக சாம்சங் நிறுவனம் இந்த சேவையை அதன் கஸ்டமர்களுக்கு வழங்க உள்ளது.

சாம்சங் வாலட் மூலமாக டிக்கெட் புக்கிங் மற்றும் பேமெண்ட் செயல்முறைகளை எளிமைப்படுத்துவதற்காக இந்த சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. பேடிஎம் வாயிலாக பல்வேறு விதமான சேவைகளை வழங்குவதே இதன் நோக்கமாக அமைகிறது.

கேலக்ஸி வாலட் யூசர்கள் இனி அதன் தளத்திலிருந்து ஃபிளைட் மற்றும் பஸ் புக்கிங், திரைப்பட டிக்கெட்டுகளுக்கான புக்கிங் மற்றும் ஈவென்ட் புக்கிங் போன்றவை உட்பட அனைத்து Paytm சேவைகளையும் பெறலாம். ‘Add to Samsung Wallet’ செயல்பாட்டை பயன்படுத்துவதன் மூலமாக கேலக்ஸி ஸ்மார்ட் போன் தங்களுடைய டிக்கெட்டுகளை நேரடியாக சாம்சங் வாலட்டில் சேமித்து வைக்கலாம். விமான நிலையங்கள், பஸ் ஸ்டேஷன்கள், சினிமா தியேட்டர் அல்லது ஈவென்ட் நிகழ்விடம் போன்றவற்றில் டிக்கெட்டுகளை கையில் எடுத்துச் செல்ல வேண்டிய கட்டாயத்தை இது தவிர்க்க உதவுகிறது. தங்களுடைய அப்ளிகேஷனை அப்டேட் செய்வதன் மூலமாக ஒருவர் இந்த புதிய சேவையை பயன்படுத்தலாம்.

அதுமட்டுமல்லாமல் புதிதாக அமல்படுத்தப்பட்டுள்ள இந்த சேவைகளுக்கான சிறப்பு சலுகையாக முதல் புக்கிங் செய்பவர்களுக்கு 1,150 ரூபாய் வரை டிஸ்கவுண்ட் வழங்குவதற்கான அறிவிப்பு கூடிய விரைவில் வெளியிடப்படும் என்பதை சாம்சங் இந்தியா மற்றும் Paytm உறுதியளித்துள்ளது. மேலும் வரக்கூடிய நாட்களில் ‘Referral Programe’அறிமுகப்படுத்த உள்ளது. இதில் சாம்சங் வாலட்டில் வெற்றிகரமான பதிவு செயல்முறையை நிறைவு செய்யும். புதிதாக சேர்ந்துள்ள நபர் மற்றும் அவரை ரெஃபர் செய்தவர் ஆகிய இருவருமே பயனடையும் விதமாக 100 ரூபாய் மதிப்பிலான அமேசான் கிஃப்ட் கார்டுகளை பெறலாம்.

டெபிட் அல்லது கிரெடிட் கார்டை பயன்படுத்தி டேப் அண்ட் பே செய்வதற்கான அம்சத்தை கூடிய விரைவில் சாம்சங் நிறுவனம் ‘சாம்சங் வாலட் டேப் அண்ட் பே ஆஃபர்’ என்ற பெயரில் அறிமுகப்படுத்த உள்ளது. இது குறித்து சாம்சங் இந்தியா நிறுவனத்தின் சீனியர் டைரக்டர் மாதூர் சத்தூர்வேடி பேசுகையில், “சாம்சங் வாலட் என்பது இந்தியாவில் 2017ஆம் ஆண்டு முதல் இயங்கிவரும் ஒரு பிரபலமான மொபைல் டேப் & பே தீர்வாக இருந்து வருகிறது. பேடிஎம் உடன் இணைந்து சாம்சங் வாலட்டில் புதிய அம்சங்களை அறிமுகப்படுத்துவதில் எங்களுக்கு மகிழ்ச்சியாக உள்ளது. இந்த அம்சங்கள் கேலக்ஸி ஸ்மார்ட்போன் யூசர்கள் எந்த சிரமமும் இல்லாமல், வெவ்வேறு அப்ளிகேஷன்களை பயன்படுத்தாமல் எளிமையான முறையில் பஸ் மற்றும் ஃபிளைட் டிக்கெட்டுகளை புக்கிங் செய்வதற்கு அனுமதிக்கிறது” என தெரிவித்துள்ளார்.

Trending News
Recent News
Prev
Next