மார்ஷல் மைனர் IV TWS இயர்பட்ஸ்... விலை மற்றும் சிறப்பம்சங்கள் இதோ!

heres-the-price-and-features-of-marshall-minor-iv-tws-earbuds
  • Publisher : news18
  • Author : -
  • Last Update : 2024-07-01 20:06:00

மார்ஷல் நிறுவனம் அதன் இயர்பட்ஸ் வரிசையில் இந்தியாவில் புதிதாக மார்ஷல் மைனர் IV TWS இயர்பட்ஸை அறிமுகப்படுத்தியுள்ளது. மார்ஷல் நிறுவனத்தின் இயர்பட்ஸ் பிரிவில் இதுவரை மொத்தம் 3 இயர்பட்ஸ் டிவைஸ்களை தான் வெளியிட்டிருந்தது. இதனையடுத்து தற்போது அதன் புதிய 4வது இயர்பட்ஸ் டிவைஸாக, மார்ஷல் மைனர் IV இயர்பட்ஸை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த இயர்பட்கள், சிக்னேசூர் சவுண்ட், கம்போர்ட் மற்றும் மேம்படுத்தப்பட்ட பேட்டரி ஆயுள் ஆகியவற்றை வாடிக்கையாளர்களுக்கு வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

இந்தியாவில் மார்ஷல் மைனர் IV இயர்பட்ஸ் விலை:

மார்ஷல் மைனர் IV இயர்பட்ஸ் கருப்பு வண்ணத்தில் மட்டுமே கிடைக்கிறது. சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த இயர்பட்ஸ் விலை ரூ.11,999 ஆகும் மற்றும் இந்தியாவில் Marshall atmarshall.com இன் அதிகாரப்பூர்வ இணையதளம் வழியாக விற்பனைக்கு கிடைக்கும் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது.

மார்ஷல் மைனர் IV அம்சங்கள்

மார்ஷல் மைனர் IV ஆனது 12mm டைனமிக் டிரைவர்களுடன் வருகிறது. இந்த இயர்பட்ஸ்கள் ஒருமுறை சார்ஜ் செய்தால் ஏழு மணிநேரம் வரை பிளேபேக் நேரத்தை வழங்குகிறது, மேலும் சார்ஜிங் கேஸ் மூலம், இயர்பட்ஸ்களின் மொத்த பேட்டரி ஆயுள் 30 மணி நேரத்திற்கும் அதிகமாக இருக்கும். மேலும், பதினைந்து நிமிடங்கள் சார்ஜ் செய்தால், மூன்று மணிநேர பிளேபேக் நேரத்தை வழங்குகிறது. USB Type-C போர்ட் வழியாக பூஜ்ஜியத்திலிருந்து 100 சதவீதம் வரை சார்ஜிங் கேஸ் முழுமையாக சார்ஜ் செய்ய இரண்டு மணிநேரம் ஆகும்.

மைனர் IV ஆனது காதுகளில் பொருந்தக்கூடிய வகையில் சிறந்த வடிவமைப்பை கொண்டுள்ளது மற்றும் IPX4 நீர்-எதிர்ப்புத் திறன் கொண்டது, இதனால் மழையிலும் யூசர்கள் தடையற்ற இசையை கேட்க முடியும். மார்ஷல் மைனர் IV இயர்பட்களின் எடை 7.93 கிராம் ஆகும், மேலும் சார்ஜிங் கேஸ் உடன் இதன் எடை 39.41 கிராம் ஆகும்.

மைனர் IV ஆனது 42% ரீசைக்கிள்டு பிளாஸ்டிக் (recycled plastic) மூலம் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் பயன்படுத்தப்பட்டுள்ள 90% சதவீத பொருள்கள், பயன்படுத்தப்பட்ட சிடி, வாஷிங் மெஷின் மற்றும் எலெக்ட்ரிக் பைசைக்கிள் போன்றவற்றில் இருந்து எடுக்கப்பட்டு, மீண்டும் பயன்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

மைனர் IV ஆனது கால்கள் மற்றும் இசையை கேட்க ஒவ்வொரு இயர்பட்களிலும் டச் சென்சிடிவ் இன்புட் உடன் வருகிறது, இந்த இயர்பட்களை காதுகளில் பொருத்தியவுடன் ஆட்டோ-பிளே மற்றும் காதுகளில் இருந்து எடுத்தவுடன் ஆட்டோ-பாஸ் உள்ளிட்ட அம்சங்களுடன் வருகிறது. இந்த இயர்பட்ஸை நிறுவனம் மிரர் டச் கண்ட்ரோல், ப்ளூடூத் பேரிங் (Bluetooth paring), ஐபிஎக்ஸ்4 (IPX4) வாட்டர் ரெசிஸ்டன்ஸ் ஆகிய அம்சத்துடன் அறிமுகம் செய்துள்ளனர்.

Trending News
Recent News
Prev
Next