அடுத்த 6 மாதத்திற்கு அடுத்தடுத்து வெளியாகப்போகும் 9 தமிழ் படங்கள்... முழு லிஸ்ட் இதோ!

cinema-indian-2-to-thug-life-here-is-the-list-of-9-movies-to-be-released-for-next-6-months
  • Publisher : news18
  • Author : -
  • Last Update : 2024-07-03 07:38:00

தமிழ் சினிமா ரசிகர்கள் வியந்து குதூகலிக்கும் வகையில் இந்த ஆண்டு எந்த தமிழ் சினிமாவும் வெளியாகவில்லை என்றால் மறுக்க முடியாது. 2024 ஆம் ஆண்டுக்கான முதல் 6 மாதங்கள் முடிந்துவிட்டது, முடிந்த இந்த 6 மாதங்களில் சூப்பர் மெகா ஹிட் கொடுத்த தமிழ் படங்களின் பட்டியலை பார்த்தால் பூஜ்யம் தான். இந்த ஆண்டு தமிழ் படங்களை விட பிற மொழி படங்கள் தான் தமிழ் சினிமா ரசிகர்களின் மத்தியில் கொண்டாடப்பட்டது.

மஞ்சுமெல் பாய்ஸ், ப்ரேமலு, ஆடுஜீவிதம், ப்ரம்மயுகம் போன்ற படங்கள் தான் திரையரங்குகளில் ரசிகர்களின் ஆரவாரத்தை பெற்று பட்டையை கிளப்பிய படங்கள். பிற மொழி படங்களாக இருந்தாலும் மொழிகளுக்கான தடையையும் தாண்டி அனைவரும் கொண்டாடும் வகையில் அமைந்தது இந்த படங்கள் தான். தமிழில் வெளியான லால் ஸலாம், அயலான், கேப்டன் மில்லர் போன்ற படங்கள் எதிர்பார்த்த அளவுக்கான வரவேற்பை ரசிகர்கள் மத்தியில் பெறவில்லை.

இந்த நிலையில், அடுத்த 6 மாதம் நிச்சயம் தமிழ் சினிமா படங்கள் ரசிகர்கள் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தவும், சூப்பர் ஹிட் அடிக்கவும் காத்திருக்கிறது. அடுத்த 6 மாதத்திற்க்கு அடுத்தடுத்து வருசையாக வெளியாகவுள்ள படங்களின் பட்டியல் இதோ.. 28 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியன் படத்தின் 2 ஆம் பாகம் வெளியாகவேயுள்ளது. ஷங்கர் இயக்கத்தில் கமல் ஹாசன் சந்தித்துள்ள இந்தியன் 2 திரைப்படம் ஜூலை மாதம் 12 ஆம் தேதி வெளியாகவுள்ளது.

இதையடுத்து தனுஷ் தானே இயக்கி நடித்து வரும் 50 வது படமான ராயன் திரைப்படம் ஜூலை 26 ஆம் தேதி வெளியாகவுள்ளது. அடுத்ததாக வரலாற்று பின்ணணியில் பிரம்மாண்டமாக பா. ரஞ்சித் இயக்கத்தில் விக்ரமின் அசாத்திய நடிப்பில் உருவாகியுள்ள தங்கலான் திரைப்படம் ஆகஸ்ட் 15 ஆம் தேதி ரிலீசாக உள்ளது. இந்த படத்தை தொடர்ந்து வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்து வரும் கோட் திரைப்படம் செப்டமபர் 5ஆம் தேதி வெளியாகவுள்ளது.

அடுத்ததாக, வரலாற்று பின்னணியில்,  முற்றிலும் மாறுபட்ட கெட்டப்பில் மிகவும் பிரம்மாண்ட பட்ஜெட்டில் சூர்யா நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கியுள்ள கங்குவா திரைப்படம் அக்டோபர் மாதம் 10 ஆம் தேதி வெளியாகவுள்ளது. சூர்யாவின் கங்குவா படத்திற்க்கு போட்டியாக ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள வேட்டையன் திரைப்படம் அக்டோபர் 10 ஆம் தேதி வெளியாகவுள்ளது. வேட்டையன், கங்குவா இரண்டு படங்களும் நேருக்கு நேர் மோதவுள்ளது ரசிகர்கள் மத்தியில் உச்சகட்ட எதிர்பார்ப்பை கிளறியுள்ளது.

இந்த படங்களை தொடர்ந்து, ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருக்கும் அஜித்தின் விடாமுயற்சி திரைப்படம் தீபாவளிக்கு வெளியாகவுள்ளதாக தகவல் கசிந்துள்ளது. அடுத்ததாக, கமல் தயாரிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள அமரன் படத்தின் படப்பிடிப்பு முடிந்துள்ளது. இந்த படம் நவம்பர் மாதம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதையடுத்து 2024 ஆம் ஆண்டின் கடைசி மாதம் மணிரத்னம் இயக்கத்தில் கமல் ஹாசன் நடித்து வரும் தக் லைப் திரைப்படம் வெளியாகவுள்ளது. படப்பிடிப்பை முடித்துவிட்டு டிசம்பர் மாதம் இந்த படம் வெளியாகவுள்ளது.

அடுத்த 6 மதத்திற்கு தரமான படங்கள் வெளியாகவுள்ள நிலையில், நிச்சயம் தமிழ் சினிமா ரசிகர்கள் கொண்டாடும் வகையில் இந்த படங்கள் இருக்கும் என்பதில் ஐயமில்லை. இந்த 9 படங்களில் எந்த படம் சூப்பர் டூப்பர் மாஸ் ஹிட் அடிக்கப்போகும் படம் என்பதை பொறுத்திருந்தான் பார்க்க வேண்டும்.

Trending News
Recent News
Prev
Next