உங்க மொபைலில் டெலிட் ஆன போட்டோஸ், வீடியோஸை மீட்டெடுப்பது எப்படி? இதோ எளிய வழிமுறை

how-to-recover-unknowingly-deleted-videos-in-google-photos
  • Publisher : news18
  • Author : -
  • Last Update : 2024-07-02 12:43:00

கூகுள் போட்டோஸ் அப்ளிகேஷனில் தவறுதலாக நீங்கள் டெலிட் செய்த போட்டோக்கள் மற்றும் வீடியோக்களை எப்படி மீட்டெடுப்பது என்று திணறி வருகிறீர்களா? உங்களுக்கு உதவுவதற்காகவே இந்த பதிவு.

கூகுள் போட்டோஸில் ஆசை ஆசையாக வைத்திருந்த வீடியோக்களை தவறுதலாக டெலிட் செய்துவிட்டீர்களா? பதற்றமடைய வேண்டாம். சமீபத்தில் டெலிட் ஆன வீடியோக்களை எடுப்பதற்கு கூகுள் போட்டோஸ் ஒரு ட்ராஷ் பின்னை வழங்குகிறது. எனவே உங்களுடைய மறக்க முடியாத நினைவுகளை மீட்டெடுப்பதற்கான இரண்டாவது வாய்ப்பை கூகுள் போட்டோஸ் வழங்குகிறது. அதனை எப்படி செய்வது என்பதை இப்பொழுது பார்க்கலாம்.

உங்களுடைய ஆண்ட்ராய்டு அல்லது ஐபோனில் டெலிட் செய்த போட்டோக்கள் அல்லது வீடியோக்களை மீட்டெடுப்பது எப்படி?

முதலில் உங்களுடைய போனில் உள்ள கூகுள் போட்டோஸ் அப்ளிகேஷனை திறந்து கொள்ளவும்.

கீழ் வலது மூலையில் காணப்படும் லைப்ரரி (Library) டேபை கிளிக் செய்யுங்கள்.

அதில் ட்ராஷ் ஆப்ஷன் இருக்கிறதா என்று தேடி பாருங்கள். உங்களுடைய சாதனத்தின் அடிப்படையில் அது ஒரு சப்-மெனுவின் கீழ் கொடுக்கப்பட்டிருக்கும். உதாரணமாக ஒரு சில ஆண்ட்ராய்டு போன்களில் நீங்கள் மேல்புறமாக ஸ்வைப் செய்யும்போது ஸ்கிரீனில் முதலாவதாக அந்த ஆப்ஷன் தோன்றும்.

ட்ராஷ் (Trash) என்பதை டேப் செய்ததும் நீங்கள் சமீபத்தில் டெலிட் செய்த அனைத்து போட்டோக்கள் மற்றும் வீடியோக்களை காணலாம்.

பட்டியலை ஸ்க்ரோல் செய்தோ அல்லது தேடல் அம்சம் மூலமாகவோ நீங்கள் மீட்டெடுக்க விரும்பும் வீடியோவை கண்டுபிடிக்கலாம்.

குறிப்பிட்ட அந்த வீடியோவை டேப் செய்து அழுத்திப் பிடித்து செலக்ட் செய்யுங்கள். ஒரே நேரத்தில் பல வீடியோக்களையும் உங்களால் இவ்வாறு செலக்ட் செய்து மீட்டெடுக்க முடியும்.

வீடியோக்களை செலக்ட் செய்தபிறகு ரீஸ்டோர் (Restore) பட்டனை கிளிக் செய்யுங்கள். இந்த பட்டன் பொதுவாக ஸ்கிரீனின் கீழ் அல்லது மேல் வலது மூலையில் காணப்படும்.

இப்பொழுது ட்ராஷிலிருந்து வீடியோக்கள் மீட்டெடுக்கப்பட்டு, மீண்டும் உங்களுடைய கூகுள் ஃபோட்டோஸ் லைப்ரேரியில் சேமிக்கப்பட்டிருக்கும்.

நினைவில் கொள்ள வேண்டிய முக்கியமான சில விஷயங்கள்

நீங்கள் டெலிட் செய்த வீடியோக்கள் மற்றும் போட்டோக்கள் உங்களுடைய கூகுள் போட்டோஸில் பேக்கப் செய்யப்பட்டிருந்தால் ட்ராஷில் 60 நாட்கள் இருக்கும். ஒருவேளை அதனை நீங்கள் பேக்கப் எடுக்காமல் இருந்தால் அது ட்ராஷில் 30 நாட்கள் மட்டுமே இருக்கும்.

இந்த குறிப்பிட்ட காலகட்டத்திற்கு பிறகு அவை நிரந்தரமாக டெலிட் செய்யப்பட்டு அதனை உங்களால் மீட்டெடுக்க முடியாமல் போய்விடும்.

டெலிட் செய்த வீடியோக்களை நீங்கள் ரீஸ்டோர் செய்யும்போது அதுவும் உங்களுடைய கூகுள் ஸ்டோரேஜ் ஸ்பேஸை ஆக்கிரமித்துக் கொள்ளும் என்பதை மனதில் வைத்துக் கொள்ளுங்கள்.

Trending News
Recent News
Prev
Next