கிளாசிக் T9 கீபோர்டு கொண்ட நோக்கியா 3210 4ஜி போன் இந்தியாவில் அறிமுகம்

nokia-3210-4g-phone-with-classic-t9-keyboard-launched-in-india
  • Publisher : news18
  • Author : -
  • Last Update : 2024-07-01 22:02:00

HMD நிறுவனம் தனது புதிய நோக்கியா 3210 போனை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. பின்லாந்து நாட்டின் HMD குளோபல் நிறுவனம் நோக்கியா போன்களை உற்பத்தி செய்து, உலகம் முழுவதும் விற்பனை செய்துவருகிறது. இந்நிலையில், இந்தியாவில் தற்போது ஒரு புதிய நோக்கியா போனை அறிமுகம் செய்துள்ளது.

இந்நிறுவனம், யூடியூப், UPI மற்றும் பல அம்சங்களுடன் கூடிய நோக்கியா 3210 என்ற போனைஅறிமுகப்படுத்தியுள்ளது. 25 ஆண்டுகளுக்கு முன்பு வெளியிடப்பட்ட நோக்கியா மொபைல் போன்றே இந்த புதிய நோக்கியா 3210 2024 மாடல் வெளிவந்துள்ளது. Nokia 3210 4G ஆனது 2.4-இன்ச் டிஸ்பிளே பொருத்தப்பட்டுள்ளது மற்றும் Unisoc T107 ப்ராசசர் மூலம் இயக்கப்படுகிறது.

Nokia 3210 4G விலை மற்றும் கிடைக்கும் விவரங்கள்:

புதிய நோக்கியா 3210 4ஜி-ன் விலை ரூ.3,999 ஆகும். அமேசான் மற்றும் HMD நிறுவன வலைதளத்தில் நேரடியாக இந்த போனை வாடிக்கையாளர்கள் வாங்கலாம்.

நோக்கியா 3210 4ஜி விவரக் குறிப்புகள்:

Nokia 3210 4G ஆனது கிரன்ஞ் பிளாக், Y2K கோல்ட் மற்றும் சுப்பா ப்ளூ ஆகிய மூன்று வண்ண விருப்பங்களில் வருகிறது. இந்த போனில் கிளாசிக் T9 கீபோர்டு மற்றும் நோக்கியாவின் அடையாளங்களில் ஒன்றான அனைவரும் விரும்பும் “ஸ்னேக்” கேம் இதில் இடம்பெற்றுள்ளது. இது, 4G இணைப்பு, QVGA ரெசல்யூஷன் கொண்ட 2.4-இன்ச் TFT LCD உடன் வருகிறது. 64MB ரேம் மற்றும் 128MB சேமிப்புடன் இணைக்கப்பட்ட யூனிசாக் டி107 சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது. இதில் 32ஜிபி வரை மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு உள்ளது.

யூடியூப் ஷார்ட்ஸ், செய்திகள், வானிலை, ஸ்னேக் கேம் (Snake Game) உள்ளிட்ட பல்வேறு ஆதரவுகளைக் கொண்டு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. நோக்கியா 3210 4G போனில் LED ப்ளாஷ் கொண்ட 2MP பேக் கேமரா கொண்டுள்ளது. மேலும் இதில், புளூடூத் 5.0, எம்பி3 பிளேயர், 3.5mm ஹெட்ஃபோன் ஜாக் மற்றும் FM ரேடியோ உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகளுடன் வருகிறது. இந்த போனானது, USB-C வழியாக சார்ஜ் செய்யும் நீக்கக்கூடிய 1,450 mAh பேட்டரி மூலம் ஆதரிக்கப்படுகிறது.

1450எம்ஏஎச் பேட்டரி வசதியுடன் நோக்கியா 3210 2024 போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக 9.8 மணி நேரம் வரை டாக்டைம் வழங்கும் இந்த போன், நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் தருகிறது. மேலும், டூயல் சிம் 4ஜி ஆதரவையும் இது வழங்குகிறது.

Trending News
Recent News
Prev
Next