இந்திய போஸ்ட் வாடிக்கையாளர்களுக்கு போலி எஸ்எம்எஸ் : அரசாங்கம் எச்சரிக்கை!

govt-warns-india-post-customers-about-fake-sms
  • Publisher : news18
  • Author : -
  • Last Update : 2024-06-30 20:50:00

பிரஸ் இன்ஃபர்மேஷன் பீரோ (PIB) என்ற நிறுவனம், இந்தியா போஸ்ட் வாடிக்கையாளர்களை குறிவைத்து நடத்தப்படும் புதிய மோசடி குறித்து இந்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. Xஇல் PIB Fact Check போர்டல் மூலம் பகிரப்பட்ட சமீபத்திய பதிவில், போலி எஸ்எம்எஸ்களில் இருந்து வாடிக்கையாளர்களின் டேட்டா திருட்டு குறித்து அரசாங்கம் எச்சரித்துள்ளது.

X பதிவில், PIB கூறியது: @IndiaPostOffice-லிருந்து உங்கள் பேக்கேஜ் கிடங்கிற்கு வந்துவிட்டது, பேக்கேஜ் டெலிவரியை தவறவிடாமல் இருக்க, பெறுநர்கள் தங்கள முகவரி விவரங்களை 48 மணி நேரத்திற்குள் புதுப்பிக்கும்படி உங்களுக்கு SMS அனுப்பப்பட்டதா? அப்படியானால் ஜாக்கிரதை! இந்த செய்தி போலியானது.

மோசடி செய்தியில், உங்கள் பேக்கேஜ் கிடங்கிற்கு வந்துவிட்டது, நாங்கள் இரண்டு முறை டெலிவரி செய்ய முயற்சித்தோம், ஆனால் முழுமையடையாத முகவரி தகவல் காரணமாக எங்களால் உங்களை அணுக முடியவில்லை. எனவே உங்கள் முகவரியை 48 மணி நேரத்திற்குள் புதுப்பிக்க வேண்டும், இல்லையெனில் உங்கள் பேக்கேஜ் திரும்பப் பெறப்படும். முகவரியைப் புதுப்பிக்க, indisposegvs.top/IN என்ற லிங்க்கை கிளிக் செய்யவும். புதுப்பிப்பு முடிந்ததும், உங்களின் பேக்கேஜ் 24 மணி நேரத்திற்குள் மீண்டும் வழங்கப்படும்.

இந்த ஏமாற்றும் செய்தியைப் பற்றி எச்சரிக்கையாக இருக்குமாறு வாடிக்கையாளர்களுக்கு PIB அறிவுறுத்தியுள்ளது. எஸ்எம்எஸ்ஸில் வழங்கப்பட்ட லிங்க்கை கிளிக் செய்வதன் மூலம் வாடிக்கையாளர்களின் டேட்டா திருட வாய்ப்பிருக்கிறது என்று PIB வலியுறுத்தியது. பேக்கேஜ் டெலிவரிக்கான முகவரி புதுப்பிப்புகளைக் கோரி, பெறுநர்களிடையே விழிப்புணர்வையும் எச்சரிக்கையையும் வலியுறுத்தும் இதுபோன்ற செய்திகளை இந்தியா போஸ்ட் எப்போதும் அனுப்புவதில்லை என்றும் கூறியுள்ளது.

இருப்பினும், வாடிக்கையாளர்கள் இது போன்ற செய்திகளைப் பெற்றால், அவர்கள் உடனடியாக புகாரளிக்கவும். புகாரைப் பதிவு செய்ய, வாடிக்கையாளர்கள் 1930 என்ற ஹெல்ப்லைன் மூலமாகவோ அல்லது நேஷனல் சைபர் கிரைம் ரிப்போர்ட் போர்ட்டல் மூலமாகவோ புகாரளிக்கலாம். இந்த மோசடிக்கு பலியாகாமல் இருக்க, பின்வருவனவற்றை அறிந்து கொள்வது அவசியமாகும்.

எச்சரிக்கை:

பெறப்பட்ட செய்திகள் குறித்து எப்போதும் எச்சரிக்கையாக இருக்கவும், குறிப்பாக லிங்க்கை கிளிக் செய்வது அல்லது டேட்டா வழங்குவது.

சரிபார்ப்பு:

நீங்கள் இந்தியா போஸ்டிலிருந்து வந்ததாகக் கூறும் செய்தியைப் பெற்றால் , எந்த லிங்க்கையும் கிளிக் செய்யவோ அல்லது எந்த தகவலையும் வழங்கவோ வேண்டாம். அதற்கு பதிலாக, செய்தியின் உறுதித்தன்மையை சரிபார்க்க இந்தியா போஸ்ட்டை நேரடியாக தொடர்பு கொள்ளவும்.

டேட்டாவை பகிர வேண்டாம்:

முன்பின் தெரியாதவர்களுடன் உங்கள் டேட்டாக்களை பகிர வேண்டாம்.

புகாரளிக்கவும்:

நீங்கள் சந்தேகத்திற்குரிய செய்தியைப் பெற்றால், அதை அதிகாரிகளிடம் புகாரளிக்கவும்.

Ads
Recent Technology News
Trending News
Recent News
Prev
Next