டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டி: மழை பெய்ய வாய்ப்பா..? - விவரம்

t20-world-cup-final-chance-of-rain-detail
  • Publisher : dailythanthi
  • Author : -
  • Last Update : 2024-06-29 06:59:00

பார்படாஸ்,

9-வது டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி கடந்த 1-ந்தேதி தொடங்கியது. அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் இணைந்து நடத்தும் இந்த கிரிக்கெட் திருவிழாவில் 20 அணிகள் பங்கேற்றன. லீக் மற்றும் சூப்பர் 8 சுற்று முடிவில் இந்தியா, ஆப்கானிஸ்தான், தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து அணிகள் அரையிறுதியை எட்டின.

அரையிறுதியில் தென் ஆப்பிரிக்கா 9 விக்கெட் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தானையும், இந்திய அணி 68 ரன் வித்தியாசத்தில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்தையும் விரட்டியடித்து இறுதிப்போட்டிக்குள் நுழைந்தன. இந்த நிலையில் மகுடம் யாருக்கு என்பதை நிர்ணயிக்கும் இறுதி ஆட்டத்தில் இந்தியாவும், தென் ஆப்பிரிக்காவும் பார்படோஸ் தலைநகர் பிரிட்ஜ்டவுனில் உள்ள கென்சிங்டன் ஓவல் மைதானத்தில் இந்திய நேரப்படி இன்று (சனிக்கிழமை) இரவு 8 மணிக்கு பலப்பரீட்சை நடத்துகின்றன.

இந்நிலையில் இன்று அங்கு மழை பெய்ய 70 சதவீதம் வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அரையிறுதியை போன்று இறுதிப்போட்டியையும் மழை அச்சுறுத்துகிறது. போட்டி நடக்கும் பிரிட்ஜ்டவுனில் இன்று வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். குளிர்ந்த காற்று, இடியுடன் கூடிய மழை பெய்வதற்கு 70 சதவீதம் வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மழையால் ஆட்டம் பாதிக்கப்பட்டால் 3 மணி நேரம் கூடுதலாக ஒதுக்கப்படும். அப்படியும் முடிவு கிடைக்காவிட்டால் ஆட்டம் மாற்றுநாளுக்கு (ரிசர்வ் டே) நகரும். நாளையும் அங்கு மழை பெய்வதற்கு வாய்ப்பு உள்ளது. ஒரு வேளை மோசமான வானிலையால் இரண்டு நாளிலும் முடிவு கிடைக்காமல் போகும் நிலை ஏற்பட்டால் இரு அணிகளும் கூட்டாக சாம்பியன் என்று அறிவிக்கப்படும்.

Ads
Recent Sports News
Trending News
Recent News
Prev
Next