ஆவினில் மாற்றுத்திறனாளிகள், திருநங்கைகளுக்கு வேலைவாய்ப்பு... அமைச்சர் மனோ தங்கராஜ் சொன்ன குட்நியூஸ்

employment-for-differently-abled-transgenders-in-aavin-what-did-minister-mano-thangaraj-say
  • Publisher : news18
  • Author : -
  • Last Update : 2024-07-01 08:45:00

ஆவின் கடைகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்படுவதுடன் மாற்றுத்திறனாளிகள் மற்றும் திருநங்கைகளுக்கான வேலைவாய்ப்பு அதிகரிக்கப்படும் என தமிழக பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார்.

கோவை, நீலகிரி, திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களின் பால்வளத்துறை அதிகாரிகளுடனான ஆய்வுக்கூட்டம் கோவை ரேஸ்கோர்சில் உள்ள அரசு விருந்தினர் மாளிகையில் நடைபெற்றது. கூட்டத்தில் கலந்துகொண்டு பால்வளத்துறையின் செயல்பாடுகள் குறித்து பேசிய அமைச்சர் மனோ தங்கராஜ் பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

அப்போது பேசிய அவர், “ஆவின் நிர்வாகம் முன்னேற்றத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிற்து. பால் கொள்முதல் ஏற்பட்டிருந்த தொய்வுநிலை மாறி பால் கொள்முதல் 36 லட்சம் லிட்டராக அதிகரித்துள்ளது. இன்னும் ஒருசில வாரங்களில் பால் கொள்முதலை 40 லட்சம் லிட்டராக அதிகரிக்க திட்டமிட்டு வருகிறோம்.” எனக் கூறினார்.

மேலும், “பாலில் கொள்முதலை 70 லட்சம் லிட்டராக உயர்த்தும் வகையிலான கட்டமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்தியாவில் மேய்ச்சல் புல் நிலம் குறைவாக உள்ளது. அதனை அதிகரிக்கும் முயற்சியில் பசுக்களிடமிருந்து அதிக அளவிலான பாலினை பெறும் வகையில் ஊறுகாய் புல்லினை வளர்க்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளோம்.” எனத் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், “ஆவின் பாலின் விற்பனை 25 சதவீதம் அதிகரித்துள்ளது. கிடாரி கன்றுகளை ஈனும் சினை ஊசி ஆரோக்கியமான பழக்கம் என நான் சொல்ல மாட்டேன். மேலை நாடுகளில் ஒரு மாடு 32 லிட்டர் பால் தரும் நிலையில், நமது நாட்டு மாடுகள் 5-6 லிட்டர் தருகிறது. இதை 10-15 லிட்டராக உயர்த்தினால் விவசாயிகளுக்கு அதிக அளவில் பலன் கிடைக்கும். அதற்காக தான் நாட்டு இனங்களை கொண்டு வர முயற்சி எடுத்து வருகிறோம்.” எனக் கூறினார்.

மேலும், “20 லட்சம் கிடாரி கன்றுகளை ஈனும் வகையிலான ஊசிகளை வழங்க திட்டமிட்டுள்ளோம். ஆவின் பொருள்களுக்கு உலகளவிலான வரவேற்பு இருப்பதால் அதனை விற்பனை செய்வதில் எந்த வகையான தடையும் இல்லை. ஆவின் நிறுவனம் செயலிழந்து எனக் கூறிய நிலையில் 36 லட்சம் லிட்டர் பால் எவ்வாறு கொள்முதல் செய்ய முடிந்தது. ஆவின் கடைகளின் எண்ணிக்கையை அதிகரிக்க திட்டமிட்டுள்ளோம். அந்த வகையில் மாற்றுத்திறனாளிகள், திருநங்ககளுக்கு அவற்றிற்கான வாய்ப்பினை அளிக்க உள்ளோம்.” என அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்தார்.

Ads
Recent All News News
Trending News
Recent News
Prev
Next