உலகக்கோப்பையை வென்ற இந்திய அணிக்கு ரூ.125 கோடி பரிசு... அறிவிப்பை வெளியிட்டது பிசிசிஐ!

cricket-icc-world-cup-t20-bcci-announced-rs-125-crore-for-team-india-for-won-the-title
  • Publisher : news18
  • Author : -
  • Last Update : 2024-06-30 20:54:00

டி20 உலகக்கோப்பையை வென்ற இந்திய அணிக்கு ரூ. 125 கோடி பரிசை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது.

20 அணிகள் பங்கேற்ற உலகக் கோப்பை டி20 கிரிக்கெட் தொடர் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் நாடுகளில் நடத்தப்பட்டது. இவற்றில் இருந்து சூப்பர் 8 சுற்றுக்கு இந்தியா, ஆஸ்திரேலியா, அமெரிக்கா, ஆப்கானிஸ்தான், வங்கதேசம், இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா உள்ளிட்ட அணிகள் தகுதி பெற்றன.

இவற்றில் இருந்து அரையிறுதிக்கு இந்தியா, இங்கிலாந்து, ஆப்கானிஸ்தான், தென் ஆப்பிரிக்கா அணிகள் முன்னேறின. பார்படாசில் நேற்று நடந்த இறுதிப் போட்டியில் இந்திய அணி தென்னாப்பிரிக்காவை எதிர்கொண்டது. இந்த மேட்சில் இந்திய அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று டி20 உலக கோப்பையை கைப்பற்றியது. இறுதிப் போட்டியில் இந்திய அணியின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்த விராட் கோலி ஆட்டநாயகன் விருது பெற்றார்.

தொடர் முழுவதும் தனது அதிரடியான பவுலிங்கால் எதிரணி வீரர்களை கலங்கடித்த ஜஸ்பிரீத் பும்ராவுக்கு தொடர் நாயகன் விருது வழங்கப்பட்டது. இந்த போட்டியுடன்  இந்திய அணியின் மூத்த வீரர்கள் விராட் கோலி, ரோஹித் சர்மா மற்றும் ரவிந்திர ஜடேஜா ஆகியோர் சர்வதேச டி20 போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தனர்.

20 ஓவர் உலகக்கோப்பையை ஏந்திய இந்திய கிரிக்கெட் அணிக்கு பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரை பல்வேறு தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். இந்திய அணி கோப்பையை வென்றதை தொடர்ந்து நாடு முழுவதும் கொண்டாட்டங்கள் களைகட்டியுள்ளன.

இந்நிலையில், இந்திய அணிக்கு பரிசுத் தொகையாக ரூ.125 கோடியை பிசிசிஐ அறிவித்துள்ளது. இது தொடர்பாக அதன் செயலாளர் ஜெய் ஷா வெளியிட்டுள்ள அறிவிப்பில், உலகக்கோப்பையை வென்ற இந்திய அணிக்கு பிசிசிஐ ரூ. 125 கோடியை பரிசுத் தொகையாக அறிவிக்கிறது.

இந்த தொடரில் இந்திய அணி மிதமிஞ்சிய திறமை, உறுதிப்பாடு, விளையாட்டு குணங்களை வெளிப்படுத்தியது. கோப்பையை சாதித்த அனைத்து வீரர்கள், பயிற்சியாளர்கள், உதவியாளர்கள் என எல்லோருக்கும் வாழ்த்துக்கள் என்று தெரிவித்துள்ளார்.

Ads
Recent Sports News
Trending News
Recent News
Prev
Next