ஸ்டைலான தோற்றத்தில் அஜித்குமார்... வெளியானது விடாமுயற்சி படத்தின் ஃபர்ஸ்ட் லுக்!

cinema-ajith-kumar-lead-magizh-thirumeni-vidaamuyarchi-movie-first-look-out-now
  • Publisher : news18
  • Author : -
  • Last Update : 2024-06-30 19:15:00

அஜித் நடிக்கும் விடாமுயற்சி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் தற்போது வெளியாகி இணையத்தில் கவனம் பெற்று வருகிறது.

துணிவு படத்தின் வெற்றியை தொடர்ந்து அஜித் தற்போது விடாமுயற்சி என்ற படத்தில் நடித்து வருகிறார். மகிழ்திருமேனி இயக்கும் இந்தப் படத்தை லைகா ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

இந்த படத்தில் அஜித்துடன் திரிஷா, அர்ஜுன், ஆரவ், ரெஜினா கசான்ட்ரா, உள்ளிட்டோர் நடிக்கின்றனர். இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். ஒளிப்பதிவு ஓம் பிரகாஷ். விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக அசர்பைஜான் நாட்டில் நடைபெற்று வந்தது.

விறுவிறுப்பான கார் சண்டை காட்சிகள் அங்கு படமாக்கப்பட்டன. இதன் பின்னர் சில காரணங்களுக்காக படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. இதற்கு இயக்குனருக்கும், தயாரிப்பு நிறுவனத்திற்கும் இடையே ஏற்பட்ட பிரச்சினை தான் காரணம் என்று தகவல்கள் பரவின.

இதன் தொடர்ச்சியாக அஜித் தனது அடுத்த படத்திற்கான போட்டோ ஷூட்டில் கலந்து கொண்டார். அந்தப் படத்தை வளர்ந்து வரும் இயக்குனரான ஆதிக் ரவிச்சந்திரன் இயக்குகிறார். அஜித் மற்றும் ஆதிக் ரவிச்சந்திரன் இணையும் படத்திற்கு குட் பேட் அக்லி என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.

அந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானதால் விடாமுயற்சி ஷூட்டிங் மீண்டும் தொடங்காது என்று இணையத்தில் பரவலாக பேசப்பட்டன. இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பாக நடிகர் அர்ஜுன் விடாமுயற்சி படம் குறித்த அப்டேட்டை வெளியிட்டார்.

அப்போது ஒட்டுமொத்தமாக இன்னும் 30 சதவீத காட்சிகள் மட்டுமே படப்பிடிப்புக்கு உள்ளதாக கூறிய அவர், இம்மாத இறுதிக்குள் விடாமுயற்சி படத்தின் ஷூட்டிங் தொடங்கும் என்று தகவலை கொடுத்தார்.

இதனை தொடர்ந்து விடாமுயற்சி படத்தின் ஷூட்டிங் 4 நாட்களுக்கு முன்பாக அசர்பைஜான் நாட்டில் தொடங்கியது. முதல் நாளிலேயே மிகப்பெரிய காரில் அந்தரத்தில் அஜித் குமார் சுழன்று நடித்திருந்தார். இது தொடர்பாக வெளியிடப்பட்ட வீடியோக்கள் வலைதளங்களில் கவனம் பெற்றன.

இந்நிலையில் விடாமுயற்சி படத்தின் டைட்டில் அறிவிப்பை தொடர்ந்து படத்துடைய ஃபர்ஸ்ட் லுக் இன்று வெளியிடப்பட்டுள்ளது. இதில் அஜித்தின் தோற்றம் நன்றாக இருப்பதாக ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.

Ads
Recent Cinema News
Trending News
Recent News
Prev
Next