காலாவதியான டிரைவிங் லைசென்ஸை ஆன்லைனிலேயே புதுப்பிப்பது எப்படி? வழிமுறை இதோ

how-to-renew-expired-driving-license-online
  • Publisher : news18
  • Author : -
  • Last Update : 2024-07-01 09:21:00

தனியார் சேவைகள் மட்டுமின்றி, அரசு சேவைகளும் ஆன்லைனில் மாற்றம் செய்யப்பட்டு வருகின்றன. பான் கார்டு விண்ணப்பம் செய்வது முதல், அடையாளச் சான்றுகளை புதுப்பிப்பது, வங்கிக் கணக்குகளை நிர்வகிப்பது, புக்கிங் செய்வது முதல் எல்லா சேவைகளுமே ஆன்லைனில் கிடைக்கிறது. அந்த வகையில், டிரைவிங் லைசென்ஸை இணையத்தில் எளிய முறையில் புதுப்பிக்கும் அம்சம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இதுவரை, டிரைவிங் லைசென்ஸ் உரிமத்தை புதுப்பிக்க, நேரடியாக அரசு அலுவலகத்துக்குச் சென்று விண்ணப்பிக்க வேண்டும். அது மட்டுமின்றி, கோவிட் ஊரடங்கின் போது, டிரைவிங் லைசென்ஸ் காலாவதி ஆகி இருந்தாலோ, அல்லது காலாவதி ஆகும் நிலையில் இருந்தாலோ, தானாகவே குறிப்பிட்ட காலம் வரை செல்லுபடியாகும் என்று அரசு அறிவித்தது. தற்போது, லைசென்சை புதுப்பிக்க வேண்டும் என்று அறிவிப்பு வெளியான நிலையில், இனி பிராந்திய போக்குவரத்து அலுவலகம் அலுவலகம் சென்று நீண்ட நேரம் வரிசையில் நிற்க வேண்டிய அவசியம் இல்லை. இந்த செயல்முறை முழுவதையும் நீங்கள் ஆன்லைனிலேயே நிறைவேற்றலாம்.

ஆன்லைனில் டிரைவிங் லைசென்சை புதுப்பிப்பது எப்படி

ஆன்லைனில் டிரைவிங் லைசென்ஸ் விண்ணப்பம் சமர்ப்பிக்கும் முறை அறிமுகம் செய்யும் முன்பு, ஸ்மார்ட்சிப் என்ற நிறுவனம் மூலமாகத் தான் புதுப்பிகவோ அல்லது டூப்ளிகேட் லைசென்ஸ் வாங்கவோ முடியும் என்ற சூழல் இருந்தது.

தற்போது, யார் வேண்டுமானாலும், ஆன்லைன் அப்ளிகேஷன் மூலம் லைசென்சை புதுப்பித்துக் கொள்ளலாம் அல்லது புதிய கார்டைப் பெறலாம்.

அது மட்டுமின்றி, தற்போது குழந்தைகளுக்குக் கூட ஆன்லைன் பயன்பாடு தேவைப்படுகிறது, அவர்களும் பயன்படுத்துகிறார்கள்.  போக்குத்துவரத்து துறை காலாவதியான டிரைவிங் லைசென்ஸ் வைத்திருப்பவர்களுக்கு ரூ.1000 அபராதமாக விதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது கவனிக்கத்தக்கது.

Ads
Recent All News News
Trending News
Recent News
Prev
Next