“மோசமான சாலைகளில் சுங்கவரி வசூல் செய்யாதீர்கள்” - எச்சரிக்கும் நிதின் கட்கரி!

nitin-gadkari-warns-against-collecting-tolls-on-bad-roads
  • Publisher : news18
  • Author : -
  • Last Update : 2024-06-30 16:14:00

தரமான சாலைகளில் மட்டுமே சுங்கவரி வசூல் செய்ய வேண்டுமெனவும், தரமற்ற சாலைகளில் சுங்கவரி வசூல் செய்தால் மக்களிடமிருந்து மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும் எனவும் சாலைப்போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி கூறியுள்ளார். இது குறித்த விளக்கத்தை இந்த பதிவில் பார்க்கலாம்.

சாலைகள் நல்ல நிலையில் இல்லாவிட்டால் நெடுஞ்சாலைத்துறை ஏஜென்சிகள் வாகன ஓட்டிகளிடம் இருந்து எந்த ஒரு சுங்க வரியையும் வசூல் செய்யக்கூடாது என்று மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கூறியுள்ளார்.

இந்த நிதியாண்டில் கிட்டத்தட்ட 5,000 கிலோ மீட்டர் தொலைவுக்கு செயற்கைக்கோள் அடிப்படையிலான சுங்கவரி வசூலிப்பு முறை அமல்படுத்தப்பட உள்ளதை பற்றி குளோபல் ஒர்க்ஷாப்பில் நிதின் கட்கரி பேசியபோது சுங்கவரி வசூலிப்பு பற்றிய இந்த முக்கியமான தகவலையும் தெரிவித்துள்ளார்.

“நீங்கள் தரமான சேவையை வழங்காவிட்டால் சுங்கவரியை வசூல் செய்யக்கூடாது, மக்களிடமிருந்து கட்டணங்களை வசூல் செய்வதற்காக சுங்கவரி வசூலிப்பு முறையை ஆரம்பிப்பதில் மட்டுமே நாம் ஆர்வம் காட்டுகிறோம்”  என்று சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி கூறியுள்ளார். “தரமான சாலைகளை வழங்கும் இடங்களில் மட்டுமே நீங்கள் வாகன ஓட்டிகளிடம் இருந்து சுங்க வரியை வசூல் செய்ய வேண்டும். ஆங்காங்கே குண்டும் குழியுமாக இருக்கக்கூடிய சாலைகள், மழையால் அடித்துச் செல்லப்பட்டு சேதமடைந்த சாலைகள் இருக்கும் பகுதியில் நீங்கள் சுங்க வரியை வசூல் செய்தால் மக்களிடமிருந்து எதிர்மறையான விளைவுகளை சந்திக்க நேரிடலாம்” என்றும் நிதின் கட்கரி கூறியுள்ளார்.

அரசு மூலமாக இயக்கப்பட உள்ள NHAI திட்டங்களில் (Global Navigation Satellite System) GNSS அடிப்படையிலான எலக்ட்ரானிக் சுங்கவரி வசூலிப்பு முறை (Electronic Toll Collection - ETC) அமல்படுத்தப்பட உள்ளது. இது ஏற்கனவே இருக்கக்கூடிய FASTag எக்கோ சிஸ்டத்துடன் இணைந்து செயல்படும். ஆரம்பத்தில் (Radio Frequency Identification) RFID-அடிப்படையிலான ETC மற்றும் GNSS-அடிப்படையிலான ETC ஆகிய இரண்டும் ஹைபிரிட் மாடலில் பயன்படுத்தப்படும்.

முதலில் இம்முறையை கமர்ஷியல் வாகனங்களுக்கு அமல்படுத்திவிட்டு, பின்னர் அதன் விரிவாக்கம் மற்றும் தனியுரிமை ஆகியவற்றை கருத்தில் கொண்டு தனியார் வாகனங்களுக்கும் அமல்படுத்தலாம் என்பதை NHAI கூறியுள்ளது.

மேலும் மோசடிகளை கண்டுபிடிப்பதற்காக ஓட்டுநர்களின் நடத்தை குறித்த பகுப்பாய்வு மற்றும் பின்னணி தரவு சார்ந்த பகுப்பாய்வு ஆகியவற்றையும் நெடுஞ்சாலைத்துறை பரிந்துரை செய்துள்ளது.

“GNSS, அமல்படுத்தப்பட்டுவிட்டால் பேமெண்ட் செலுத்தும் முறை ப்ரீபெய்டில் இருந்து போஸ்ட்பெய்ட் ஆக மாற்றப்படும். பயண திட்டங்களின் அடிப்படையில் வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் கிரெடிட்களை விரைவாக வழங்குவதற்கு இது உதவியாக இருக்கும்” என்றும் NHAI பரிந்துரை அளித்துள்ளது.

Ads
Recent National News
Trending News
Recent News
Prev
Next