கோபா அமெரிக்க கால்பந்து தொடர்; கோஸ்டா ரிகாவை வீழ்த்தி வெற்றி பெற்ற கொலம்பியா

copa-america-soccer-series-colombia-defeated-costa-rica
  • Publisher : dailythanthi
  • Author : -
  • Last Update : 2024-06-29 08:47:00

அரிசோனா,

உலகக் கோப்பை, யூரோ கோப்பை கால்பந்து தொடருக்கு அடுத்து புகழ்பெற்ற கோபா அமெரிக்க கால்பந்து தொடர் அமெரிக்காவில் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் கடந்த 1916-ம் ஆண்டு முதல் நடத்தப்பட்டு வருகிறது. இந்த தொடர் வரும் ஜூலை 15-ம் தேதி வரை நடைபெறுகிறது.

இந்நிலையில் இந்த தொடரில் அரிசோனாவில் இன்று நடைபெற்ற ஒரு ஆட்டத்தில் கோஸ்டா ரிகா - கொலம்பியா அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் ஆரம்பம் முதலே அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய கொலம்பியா அணி முதல் பாதி ஆட்ட நேர முடிவில் 1-0 என முன்னிலை பெற்றது.

தொடர்ந்து நடைபெற்ற 2வது பாதி ஆட்டத்திலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய கொலம்பியா அணி மேலும் 2 கோல்கள் அடித்து அசத்தியது. இறுதியில் ஆட்ட நேர முடிவில் கொலம்பியா அணி 3-0 என்ற கோல் கணக்கில் கோஸ்டா ரிகாவை வீழ்த்தி வெற்றி பெற்றது.

Ads
Recent Sports News
Trending News
Recent News
Prev
Next