ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப்: 2வது சுற்று ஆட்டத்தில் சுவிட்சர்லாந்து-இத்தாலி அணிகள் இன்று மோதல்

european-football-championship-switzerland-italy-clash-today-in-the-2nd-round-match
  • Publisher : dailythanthi
  • Author : -
  • Last Update : 2024-06-29 10:05:00

பெர்லின்,

17-வது ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப் (யூரோ) போட்டி ஜெர்மனியில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 24 அணிகள் 6 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு அணியும், தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும்.லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரு இடங்களை பிடிக்கும் அணிகள், 3-வது இடத்தை பெறும் சிறந்த 4 அணிகள் என்று மொத்தம் 16 அணிகள் 'நாக்-அவுட்' சுற்றுக்கு தகுதி பெறும்.

அதன்படி தற்போது இந்த தொடரின் லீக் சுற்று ஆட்டங்கள் கடந்த 27ம் தேதி நிறைவு பெற்றன. லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரு இடங்களை பிடித்த ஜெர்மனி, சுவிட்சர்லாந்து, ஸ்பெயின், இத்தாலி, இங்கிலாந்து, டென்மார்க், ஆஸ்திரியா, பிரான்ஸ், ரோமானியா, பெல்ஜியம், போர்ச்சுகல், துருக்கி ஆகிய 12 அணிகளும், 3-வது இடத்தை பெறும் சிறந்த 4 அணிகளான சுலோவேனியா, நெதர்லாந்து, சுலோவாக்கியா, ஜார்ஜியா உள்ளிட்ட 16 அணிகள் 2வது ('நாக்-அவுட்') சுற்றுக்கு தகுதி பெற்றன.

இந்நிலையில் இந்த தொடரில் இன்று நடைபெறும் 2வது சுற்று ஆட்டத்தின் முதல் ஆட்டத்தில் சுவிட்சர்லாந்து-இத்தாலி அணிகள் ஒலிம்பியாஸ்டேடியன் பெர்லினில் மோத உள்ளன. இந்திய நேரப்படி இந்த ஆட்டம் இரவு 9.30 மணிக்கு தொடங்குகிறது.

Ads
Recent Sports News
Trending News
Recent News
Prev
Next