ஹெச்பி எலைட்புக் அல்ட்ரா மற்றும் ஹெச்பி ஆம்னிபுக் எக்ஸ் இந்தியாவில் அறிமுகம் !

hp-elitebook-ultra-and-hp-omnibook-x-launched-in-india
  • Publisher : news18
  • Author : -
  • Last Update : 2024-06-29 07:17:00

பிரபல பிசி தயாரிப்பு நிறுவனமான HP சமீபத்தில் அதன் புதிய AI மூலம் இயங்கும் ஹெச்பி எலைட்புக் அல்ட்ரா மற்றும் ஹெச்பி ஆம்னிபுக் எக்ஸ் ஆகிய இரண்டு லேப்டாப்களை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. மேலும், இரண்டு லேப்டாப்களும் ஸ்னாப்டிராகன் எக்ஸ் எலைட் ப்ராசசர் மூலம் இயக்கப்படுகிறது.

விலை மற்றும் கிடைக்கும் விவரங்கள்: ஹெச்பி எலைட்புக் அல்ட்ரா ஆனது இந்தியாவில் ரூ.1,69,934 விலையில் கிடைக்கிறது. மேலும் இதனை ஹெச்பி பார்ட்னர்கள் மூலமாகவோ அல்லது ஹெச்பி ஆன்லைன் ஸ்டோர் மூலமாகவோ வாடிக்கையாளர்கள் முன்பதிவு செய்யலாம். ஹெச்பி ஆம்னிபுக் எக்ஸ் ஆனது இந்தியாவில் ரூ.1,39,999 விலையில் கிடைக்கிறது. HP வேர்ல்ட் ஸ்டோர்கள், HP ஆன்லைன் ஸ்டோர், ரிலையன்ஸ் டிஜிட்டல், க்ரோமா மற்றும் விஜய் சேல்ஸ் மூலமாக வாடிக்கையாளர்கள் முன்பதிவு செய்யலாம்.

விவரக்குறிப்புகள்:

டிஸ்ப்ளே:

எலைட்புக் அல்ட்ரா மற்றும் ஆம்னிபுக் எக்ஸ் ஆகிய இரண்டு லேப்டாப்களுமே 14-இன்ச் டச்ஸ்கிரீன் IPS டிஸ்ப்ளே, 2K ரெசல்யூஷன் (2240 ​​x 1400p), 100 சதவீதம் sRGB கலர் gamut மற்றும் 300நிட்ஸ் பிரைட்னஸ் ஆகியவற்றைக் கொண்டுள்ளது.

ப்ராசசர்:

12 கோர்கள் மற்றும் 3.4GHz வரையிலான கிளாக் ஸ்பீட் கொண்ட ஸ்னாப்டிராகன் X எலைட் X1E-78-100 ப்ராசசர் மூலம் இந்த லேப்டாப்கள் இயங்குகின்றன.

ரேம் மற்றும் ஸ்டோரேஜ்:

இந்த லேப்டாப்கள் 16GB LPDDR5x 8400MHz ஆன்போர்டு ரேம் மற்றும் 1TB PCIe Gen 4 NVMe M.2 SSD சேமிப்புடன் வருகிறது.

OS:

எலைட்புக் அல்ட்ரா மற்றும் ஆம்னிபுக் எக்ஸ் ஆகிய இரண்டு லேப்டாப்களும் விண்டோஸ் 11 ப்ரோ வெர்ஷன் உடன் வருகிறது.

ஆடியோ:

எலைட்புக் அல்ட்ரா மற்றும் ஆம்னிபுக் எக்ஸ் ஆகிய இரண்டு லேப்டாப்களிலும் ஹெச்பி ஆடியோ பூஸ்டுடன் பாலி ஸ்டுடியோ டூயல் ஸ்டீரியோ ஸ்பீக்கர் உள்ளன.

பேட்டரி:

இரண்டு லேப்டாப்களிலும் 65W USB Type-C HP ஸ்மார்ட் அடாப்டர் சார்ஜ் கொண்ட 59Wh பேட்டரி கொடுக்கப்பட்டுள்ளது.

I/O போர்ட்கள்:

ஆம்னிபுக் எக்ஸ் ஆனது USB Type-A போர்ட் (HP ஸ்லீப் and சார்ஜ் ), 3.5mm காம்போ ஜாக், USB Type-C 10Gbps மற்றும் USB Type-C 40Gbps போர்ட் ஆகியவற்றுடன் வருகிறது. அதே நேரம் எலைட்புக் அல்ட்ரா ஆனது USB Type-C 40Gbps போர்ட், USB Type-C 10Gbps போர்ட், USB Type-A 5Gbps சார்ஜிங் போர்ட் மற்றும் ஸ்டீரியோ ஹெட்ஃபோன்/மைக்ரோஃபோன் காம்போ ஜாக் ஆகியவற்றுடன் வருகிறது.

வயர்லெஸ் இணைப்பு:

ஆம்னிபுக் எக்ஸ் ஆனது Wi-Fi 7 மற்றும் ப்ளூடூத் 5.4 ஆதரவுடன் வருகிறது, அதே நேரத்தில் எலைட்புக் அல்ட்ரா ஆனது Wi-Fi 6E மற்றும் ப்ளூடூத் 5.2 ஆதரவுடன் வருகிறது.

மற்ற அம்சங்கள்:

இரண்டு லேப்டாப்களிலும் 5MP IR வெப்கேம், கேமரா பிரைவசி ஷட்டர், ட்ரஸ்ட்டேட் பிளாட்ஃபார்ம் மாட்யூல் செக்யூரிட்டி, மைக் ம்யூட் கீ மற்றும் பலஅம்சங்கள் உள்ளன.

Ads
Recent Technology News
Trending News
Recent News
Prev
Next