கிரெடிட் கார்டு உங்களின் கிரெடிட் ஸ்கோரை எவ்வாறு பாதிக்கிறது? நிபுணர்கள் விளக்கம்

what-long-term-effects-does-using-credit-cards-regularly-have-on-your-credit-score-details-here
  • Publisher : news18
  • Author : -
  • Last Update : 2024-06-28 19:54:00

உங்களிடம் கிரெடிட் கார்டு உள்ளதா? உங்கள் வங்கி உங்களுக்கு சில கவர்ச்சியான கடன் சலுகைகளை வழங்கியுள்ளதா? அந்த சலுகைகளை நிறைவேற்றிக் கொள்ள வேண்டும் என்ற ஆசை உங்களுக்கு இருக்கிறதா? அதாவது பாலி அல்லது லண்டனுக்கு சுற்றுலா, ஆடம்பரமான பைக், எல்சிடி டிவி போன்ற உங்களின் ஆசைகள் அனைத்தையும் நிறைவேற்றிக் கொள்ளும் என்ற ஆசை இருக்கும். இன்னும் சிலருக்கு கிரெடிட் கார்டின் லிமிட்டை முழுவதுமாக பயன்படுத்த வேண்டும் என்ற ஆசையும் கூட இருக்கலாம். ஆனால் எச்சரிக்கை, இதுபோன்ற மோசமான நடவடிக்கையில் ஈடுபடக்கூடாது. ஏனெனில் கிரெடிட் கார்டு மூலம் அதிகமாக செலவு செய்வது எதிர்காலத்தில் உங்களின் நிதிநிலையை மோசமான நிலைக்கு தள்ளிவிடும்.

கிரெடிட் பயன்பாடு என்பது நீங்கள் வைத்திருக்கும் கிரெடிட் லிமிட்டின் அளவைப் பொறுத்து, உங்களுடைய கிரெடிட் ஸ்கோர் அமையும் என்று ஹோம் கிரெடிட் இந்தியாவின் சீஃப் மார்க்கெட்டிங் ஆஃபீஸ்ர் ஆஷிஷ் திவாரி கூறியுள்ளார். உங்கள் கிரெடிட் ஸ்கோரில் கிரெடிட் பயன்பாட்டைப் பொறுத்து உங்கள் கடன் தகுதியை நேர்மறையாகவோ அல்லது எதிர்மறையாகவோ பாதிக்கலாம். ஒருவர் தங்கள் கிரெடிட் கார்டு வரம்பை ஒருபோதும் தீர்த்து விடக்கூடாது. சராசரியாக கிரெடிட் பயன்பாட்டு விகிதம் 50 சதவீதத்தில் வைத்திருப்பது சிறந்தது என்று திவாரி அறிவுறுத்துகிறார்.

உங்கள் கிரெடிட் கார்டின் கிரெடிட் வரம்பை குறைவாகப் பயன்படுத்துவது பொறுப்பான செலவினங்களைப் பிரதிபலிக்கிறது மற்றும் ஏதேனும் தற்செயல் நிகழ்வுகளின் போது பஃபர்களை அனுமதிக்கிறது என்று CRIF High Mark இன் நிர்வாக இயக்குநர் சஞ்சீத் தவார் கூறியுள்ளார்.

கிரெடிட் கார்டில் கிடைக்கும் கடன் வரம்பை குறைவாகப் பயன்படுத்துவது, பொறுப்பான செலவைக் சுட்டிக் காட்டுகிறது. எனவே, கிரெடிட் ஸ்கோர் கணக்கிடும் போது, குறைந்த கடன் வரம்பு சிறந்த நடத்தையாகப் பார்க்கப்படுகிறது. குறைந்த கடன் பயன்பாட்டு விகிதம் உங்களுடைய புத்திசாலித்தனமான கடன் நிர்வகிப்பு திறனை சுட்டிக்காட்டுகிறது. மேலும் உங்கள் கிரெடிட் ஸ்கோரை நல்ல முறையில் பராமரிக்க உதவுகிறது என்று TransUnion CIBIL Limited நிறுவனத்தின் துணைத் தலைவர் பூஷன் பட்கில் கூறியுள்ளார். கடன் பயன்பாட்டு விகிதம் என்பது உங்கள் கடன் கட்டுப்பாட்டைக் காட்டும் ஒரு முக்கியமான எண் ஆகும். குறைந்த கடன் பயன்பாட்டு விகிதத்தை பராமரிப்பது, உங்கள் கிரெடிட் ஸ்கோரை மேம்படுத்துவதோடு, எதிர்காலத்தில் கடன் பெறுவதற்கான வாய்ப்புகளையும் அதிகரிக்கும்.

நல்ல கிரெடிட் ஸ்கோர் வைத்திருந்தால் மட்டுமே நீங்கள் விரும்பும் கடன்களை எளிதாக வாங்க முடியும். இல்லையெனில் உங்கள் லோன் அப்ரூவ் ஆவதில் சிக்கல்கள் ஏற்படலாம் அல்லது தாமதமாகலாம். மேலும் உங்களுக்கு அதிக வட்டியிலான கடன்கள் வழங்கப்படவும் வாய்ப்பு உள்ளது. எனவே கிரெடிட் ஸ்கோரை எதிர்மறையாக பாதிக்கக்கூடிய எந்த ஒரு விஷயத்தையும் செய்யாதீர்கள். ஒன்றுக்கு மேற்பட்ட கிரெடிட் கார்டுகளை அனாவசியமாக வைத்திருப்பது நல்லதல்ல.

தனித்தனி கணக்குகளில் கிரெடிட் பயன்பாட்டை குறைவாக வைத்திருக்கவும், ஒட்டுமொத்த கடன் பயன்பாட்டு விகிதத்தை குறைவாக பராமரிக்கவும் நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர். இருப்பினும், பூஜ்ஜியக் கடன் பயன்பாட்டு விகிதத்தைக் கொண்டிருப்பது நல்ல யோசனையல்ல என்றும் திவாரி கூறியுள்ளார்.

Trending News
Recent News
Prev
Next