EPFO சந்தாதாரர்களுக்கு வெளியான நற்செய்தி - நிகர சம்பளம் அதிகரிக்கப் போகிறது !

good-news-for-epfo-subscribers-ne-salary-to-increase
  • Publisher : news18
  • Author : -
  • Last Update : 2024-06-29 10:35:00

செப்டம்பர் 2013க்குப் பிறகு அரசுப் பணியில் சேர்ந்த ஊழியர்களுக்கு, குழு காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் எந்த பிடித்தமும் இருக்காது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

செப்டம்பர் 1, 2013க்குப் பிறகு EPFO -வில் சேர்ந்த அரசு ஊழியர்களுக்கு புதிய விதி கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த தேதிக்கு முன் பணியில் சேர்ந்தவர்கள் தற்போதைய GIS விலக்குகளை பெற்று வருகிறார்கள். ஆனால், செப்டம்பர் 1, 2013க்குப் பிறகு சேர்ந்தவர்களுக்கு குழு காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் தொகை பிடிக்கப்பட்டது. இந்நிலையில் இனி அவர்கள் GIS திட்டத்தின் கீழ் வரமாட்டார்கள் என்று தெரியவந்துள்ளது. அத்துடன், GIS திட்டத்தின் கீழ் இதுவரை பிடிக்கப்பட்ட சம்பளமும் திருப்பி அளிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

குழு காப்பீட்டுத் திட்ட பிடித்தம் நிறுத்தப்படுவதால், நிகர சம்பளம் அதிகரிக்கும். அதாவது, மத்திய அரசு ஊழியர்கள் வீட்டிற்கு எடுத்துச் செல்லும் சம்பளத்தில் அளவு அதிகரிக்கும். GIS நிதி பங்களிப்பிற்காக ஊதிய விகிதத்தின் அடிப்படையில் மாதச் சம்பளத்தில் இருந்து முன்பு பிடித்தம் செய்யப்பட்டது. இப்போது விலக்குகள் இல்லாததால், அந்த தொகை பிடிக்கப்படாமல், சம்பளத்தில் சேர்க்கப்படும். இந்த தொகை குறைவாக இருந்தாலும், அதன் தாக்கம் படிப்படியாக அதிகரிக்கும் என்று நிபுணர்கள் சிலர் கூறுகின்றனர்.

குழு காப்பீட்டு திட்டம் என்றால் என்ன?

மத்திய அரசு கடந்த ஜனவரி 1, 1982ல் குழு காப்பீட்டுத் திட்டத்தை அறிமுகப்படுத்தியது. விபத்துகள் ஏற்பட்டால் தொழிலாளர்கள் மற்றும் அவர்களைச் சார்ந்தவர்களுக்கு சமூக-பொருளாதார பாதுகாப்பை வழங்கும் வகையில் இந்த திட்டம் வடிவமைக்கப்பட்டது. இதில், மத்திய, மாநில அரசு பொதுத்துறைகளில் பணியாற்றி வரும் நிரந்தர ஊழியர்களுக்கு மட்டுமே இது பொருந்தும். ஒப்பந்த ஊழியர்கள், தற்காலிக பணியாளர்கள், பகுதி நேர ஊழியர்கள் இந்த திட்டத்தின் கீழ் வரவில்லை.

Trending News
Recent News
Prev
Next