வெறும் 9 ரூபாய்க்கு அன்லிமிடெட் டேட்டா வழங்கும் ஏர்டெல் நிறுவனம்!

airtel-is-offering-unlimited-data-for-rs-9
  • Publisher : news18
  • Author : -
  • Last Update : 2024-06-30 17:07:00

இந்தியாவின் மிகப்பெரிய தகவல் தொடர்பு நிறுவனமான பாரதி ஏர்டெல் சமீபத்தில் 9 ரூபாய்க்கான ஒரு புதிய திட்டத்தை அறிமுகம் செய்தது. இந்த திட்டத்தில் ரீசார்ஜ் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு 10GB வரையிலான அன்லிமிடெட் டேட்டா வழங்கப்படுகிறது. ஆனால் இதற்கு ஒரு கண்டிஷன் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த அன்லிமிடெட் டேட்டாவை நீங்கள் ஒரு குறுகிய காலகட்டத்திற்கு மட்டுமே பயன்படுத்த முடியும்.

ஏர்டெல் நிறுவனத்தின் இந்த 9 ரூபாய் திட்டத்தை போலவே வோடபோன் ஐடியா ( Vi) நிறுவனமும் 24 ரூபாய் மதிப்பிலான அன்லிமிடெட் திட்டம் ஒன்றை தனது வாடிக்கையாளர்களுக்கு வழங்கி வருகிறது. இதுவும் அன்லிமிடெட் டேட்டா வழங்கக்கூடிய ஒரு டேட்டா வவுச்சர் திட்டம் ஆகும். ஏர்டெல் நிறுவனத்தின் 9 ரூபாய் திட்டத்தை போலவே இந்த திட்டமும் ஒரு குறுகிய கால கட்டத்திற்கு மட்டுமே செல்லுபடி ஆகும். அதாவது வெறும் ஒரு மணி நேரத்திற்கு மட்டுமே உங்களால் அன்லிமிடெட் டேட்டாவை பயன்படுத்த முடியும். ஆனால் இந்த திட்டத்தில் ஒரு கூடுதல் நன்மை கொடுக்கப்பட்டுள்ளது.

ஏர்டெல் வழங்கும் 9 ரூபாய் திட்டம் மற்றும் வோடபோன் ஐடியா வழங்கும் 24 ரூபாய் திட்டம் ஆகிய இரண்டையும் இப்பொழுது ஒப்பிட்டு பார்க்கலாம்.

பாரதி ஏர்டெல் வழங்கும் 9 ரூபாய் அன்லிமிடெட் திட்டம்

ஏர்டெலின் இந்த 9 ரூபாய் திட்டம் 10GB என்ற FUP (fair usage policy) லிமிட்டை அடையும்வரை அன்லிமிடெட் டேட்டாவை வழங்குகிறது. FUP முடிந்துபோகும் பட்சத்தில் இணைய வேகம் 64 Kbpsஆக குறைக்கப்படுகிறது. நாம் ஏற்கனவே கூறியதுபோல இந்த திட்டம் ஒரு மணி நேர வேலிடிட்டியை மட்டுமே கொண்டுள்ளது.

வோடபோன் ஐடியா நிறுவனம் வழங்கும் 24 ரூபாய் திட்டம்

வோடபோன் ஐடியா 24 ரூபாய்க்கு ஒரு மணி நேரம் வேலிடிட்டி கொண்ட திட்டத்தில் அன்லிமிடெட் டேட்டாவை வாடிக்கையாளர்களுக்கு வழங்குகிறது. இதில் உள்ள ஒரே ஒரு வித்தியாசம் என்னவென்றால், இந்த திட்டத்தில் FUP லிமிட் எதுவும் நிர்ணயிக்கப்படவில்லை. எனவே யூசர்கள் தங்களது விருப்பம் போல், எவ்வளவு டேட்டாவை வேண்டுமானாலும் பயன்படுத்திக் கொள்ளலாம்.

ஏர்டெல் ரூ. 9 vs Vi ரூ. 24

எனவே இந்த இரண்டு திட்டங்களில் எது சிறந்தது என்று நீங்கள் நினைக்கிறீர்கள்? ஏர்டெல் நிறுவனம் வழங்கும் திட்டம் மலிவான விலையில் கிடைத்தாலும் அது அனைவரது தேவையையும் பூர்த்தி செய்யும் விதமாக இல்லை. ஒரு சில யூசர்களுக்கு உண்மையிலேயே FUP லிமிட் இல்லாமல் அன்லிமிடெட் டேட்டா பிளான் தேவைப்படலாம். இதுபோன்ற சூழ்நிலையில் ஒருவர் வோடபோன் ஐடியா திட்டத்தை தேர்வு செய்யலாம்.

அதே நேரத்தில் மலிவான விலையில் டேட்டா வவுச்சர் திட்டத்தை வாங்க நினைக்கும் நபர்களுக்கு ஏர்டெல் வழங்கும் இந்த திட்டம் ஏற்றதாக அமையும். மேலும் அதிக அளவிலான டேட்டாவை ஒரு குறுகிய கால கட்டத்திற்கு பயன்படுத்த நினைக்கும் வாடிக்கையாளர்கள், யூசர்களுக்கு வோடபோன் ஐடியா நிறுவனம் வழங்கும் 24 டேட்டா வவுச்சர் திட்டம் சரியானதாக இருக்கும். எனவே உங்களுடைய தேவைக்கு ஏற்றார்போன்ற ஒரு திட்டத்தை நீங்கள் தேர்வு செய்து கொள்ளலாம்.

Trending News
Recent News
Prev
Next