பீகாரில் மற்றொரு பாலம் இடிந்து விழுந்தது... 9 நாட்களில் 5-வது சம்பவம்

5th-in-9-days-bihar-bridge-under-construction-for-4-years-collapses
  • Publisher : dailythanthi
  • Author : -
  • Last Update : 2024-06-28 22:39:00

பாட்னா,

பீகார் மாநிலம் மதுபானி மாவட்டத்தில் ஆற்றின் குறுக்கே பாலம் ஒன்று கட்டப்பட்டு வருகிறது. ரூ.3 கோடி செலவில் கட்டப்படும் இந்தப் பாலம் 2021ஆம் ஆண்டு முதல் கட்டப்பட்டு வருகிறது. பீகார் அரசின் ஊரகப் பணிகள் துறையால் இந்த பாலம் கட்டப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், ஆற்றில் நீர்மட்டம் அதிகரித்ததன் காரணமாக பாலத்தின் ஒரு பகுதி திடீரென இடிந்து விழுந்தது. பீகாரில் தொடர்ச்சியாக பாலங்கள் இடிந்து விழும் சம்பவங்கள் மாநிலத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பீகாரில் கடந்த ஒன்பது நாட்களில் 5 பாலங்கள் இடிந்து விழுந்துள்ளது.

முன்னதாக கடந்த வாரம் பீகாரின் அராரியா, சிவான் மற்றும் கிழக்கு சம்பாரண் ஆகிய மாவட்டங்களில் புதிதாக கட்டிமுடிக்கப்பட்ட பாலம் உள்பட 3 பாலங்கள் அடுத்தடுத்து இடிந்து விழுந்த நிலையில், நேற்று மதியா ஆற்றின் மீது கட்டப்பட்டு இருந்த ஒரு பாலம் இடிந்து விழுந்தது. பீகாரில் அடுத்தடுத்து 5 பாலங்கள் இடிந்து விழுந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Ads
Recent National News
Trending News
Recent News
Prev
Next