நான் பேசியதை நீக்கினாலும், உண்மையை நீக்க முடியாது... அவைக்குறிப்பில் இருந்து நீக்கியது குறித்து ராகுல் கருத்து

rahul-gandhi-writes-to-lok-sabha-speaker-om-birla-for-restore-his-speech
  • Publisher : news18
  • Author : -
  • Last Update : 2024-07-02 13:24:00

மக்களவையில் எதிர்க்கட்சித் தலைவரின் உரையில் இருந்து 11 பகுதிகள் நீக்கப்பட்ட நிலையில், தான் உண்மையை மட்டுமே பேசியதாக ராகுல் காந்தி விளக்கம் அளித்துள்ளார்.

மக்களவையில் குடியரசுத் தலைவர் உரை மீதான விவாதத்தில், எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி சுமார் ஒன்றே முக்கால் மணிநேரம் பேசினார்.

நீட் தேர்வு முறைகேடு முதல் பிரதமரின் தேர்தல் பரப்புரை வரை பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து ராகுல் காந்தி கடுமையாக சாடினார். ராகுல் காந்தி உரையாற்றிய போதே, பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்ட அமைச்சர்கள் பல முறை குறுக்கீடு செய்தனர்.

ராகுல் காந்தி உரையாற்றிய பிறகு, அமித்ஷா, பூபேந்தர் யாதவ், கிரண் ரிஜிஜூ ஆகியோர் சபாநாயகர் ஓம் பிர்லாவை, அவரது அலுவலகத்தில் சந்தித்தனர். அப்போது, அவையின் விதிமுறைகளை மீறி ராகுல் காந்தி பேசியதாக சபாநாயகரிடம் புகார் அளித்தனர்.

அதன் அடிப்படையில், ராகுல் காந்தி ஆற்றிய உரையில் 11 பகுதிகளை அவைக் குறிப்பில் இருந்து சபாநாயகர் நீக்கி உத்தரவிட்டார். அதில், இந்துக்கள், ஆர்.எஸ்.எஸ்., பாஜக, பிரதமர் மோடி, சபாநாயகர் குறித்து பேசியவை நீக்கம் செய்யப்பட்டுள்ளன.

இந்நிலையில், செய்தியாளர்களை சந்தித்த ராகுல் காந்தி, மோடியின் உலகத்தில் உண்மைகளை நீக்கி விடலாம் என்று விமர்சித்தார். தான் உண்மையை மட்டுமே பேசியதாகவும், அவர்கள் எதை வேண்டுமானாலும் நீக்கட்டும் என்றும் ராகுல் காந்தி கூறினார்.

இதையடுத்து அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்பட்ட தனது பேச்சுகளை மீண்டும் சேர்க்க வேண்டும் என சபாநாயகருக்கு எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கடிதம் எழுதியுள்ளார்.

Ads
Recent All News News
Trending News
Recent News
Prev
Next