இந்திய அணியின் அடுத்த பயிற்சியாளர் யார்? இறுதி பட்டியலில் 2 பெயர்கள்...

cricket-who-is-team-india-next-head-coach-2-names-in-the-list-announcement-soon
  • Publisher : news18
  • Author : -
  • Last Update : 2024-07-02 10:35:00

இந்திய அணியின் அடுத்த தலைமை பயிற்சியாளர் யார் என்பது  குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகவுள்ளது. இறுதி பட்டியலில் 2 பெயர்கள் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அடுத்த பயிற்சியாளர் குறித்த அறிவிப்பு இந்தியா மற்றும் இலங்கை அணிகள் மோதும் தொடருக்க முன்னதாக வெளியாகும் என்று பிசிசிஐ செயலர் ஜெய் ஷா கூறியுள்ளார். இந்திய அணியின் பயிற்சியாளராக இருந்த ராகுல் டிராவிட்டின் பொறுப்பு கடந்த ஆண்டு நடந்த 50 ஓவர் உலகக்கோப்பை தொடருடன் முடிவுக்கு வந்தது.

இருப்பினும் டி20 உலகக்கோப்பை தொடருக்காக டிராவிட்டின் பதவிக்காலம் நீட்டிக்கப்பட்டது. பிசிசிஐ யின் இந்த நடவடிக்கைக்கு கைமேல் பலன் கிடைத்துள்ளது.

நடந்து முடிந்த டி20 உலகக்கோப்பை தொடரில் டிராவிட்டின் பயிற்சியின் கீழ் இந்திய அணி ஒரு போட்டியில் கூட தோற்கவில்லை. அணி வீரராக இருந்து செய்ய முடியாத சாதனையை டிராவிட் பயிற்சியாளராக செய்து முடித்துள்ளார். இந்நிலையில் அடுத்த பயிற்சியாளர் யார் என்கிற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் காணப்படுகிறது.

கவுதம் காம்பீர்தான் அணியின் அடுத்த பயிற்சியாளராக வருவார் என்று பெரும்பாலான கிரிக்கெட் நிபுணர்கள் கூறி வருகின்றனர். அதேபோன்று இந்திய மகளிர் அணியின் முன்னாள் பயிற்சியாளர் டபிள்யூ.வி. ராமனும் இந்த போட்டியில் உள்ளார். அவரிடமும் நேர்காணல் நடத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் புதிய பயிற்சியாளர் குறித்து பேட்டி அளித்துள்ள பிசிசிஐ செயலர் ஜெய்ஷா, இந்தியா மற்றும் இலங்கை அணிகள் மோதும் தொடருக்கு முன்னதாக அதாவது ஜூலை 27 ஆம் தேதிக்கு முன்னதாக பயிற்சியாளர் குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று தெரிவித்துள்ளார்.

டி20 தொடருக்கான இந்திய அணியின் அடுத்த கேப்டனாக ஹர்திக் பாண்ட்யா தொடர்ந்து செயல்படுவாரா என்று ஜெய் ஷாவிடம் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதில் அளித்த அவர், அதுகுறித்து தேர்வுக்குழு தான் முடிவு செய்யும். தொடர்ந்து மோசமாக விளையாடி வந்த ஹர்திக் பாண்ட்யா மீது அணி நிர்வாகம் நம்பிக்கை வைத்தது. அதனை சிறப்பான ஆட்டத்தின் மூலம் அவர் காப்பாற்றியுள்ளார் என்று தெரிவித்தார்.

உலகக்கோப்பை தொடரை அடுத்து இந்திய அணி ஜிம்பாப்வேயில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுகிறது. போட்டிகள் வரும் 5 ஆம் தேதி தொடங்குகின்றன.

Ads
Recent Sports News
Trending News
Recent News
Prev
Next