நான் யார் என்று தெரியாமல் பேசி விட்டார்கள்.. அவர்களுக்கு ஒன்று மட்டும் சொல்கிறேன் - ஹர்திக் பாண்டியா

cricket-a-lot-of-people-said-a-lot-of-things-without-knowing-me-says-hardik-pandya
  • Publisher : news18
  • Author : -
  • Last Update : 2024-07-01 21:56:00

இந்திய அணியின் ஆல் ரவுண்டர்களில் ஒருவரான ஹர்திக் பாண்டியா கடந்த சில மாதங்களாக கடும் மனவேதனையை அனுபவித்து வந்தார். அவர் மனைவி உடனான விவாகரத்து வதந்திகள் ஒருபுறம் சுற்றிவர, மறுபுறம் ரோகித் கேப்டன் பதவியில் இருந்து தூக்கிவிட்டு, அந்த இடத்தில் ஹர்திக் பாண்டியாவை மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகம் நியமித்தது. ஆனால், மும்பை அணி அடுத்தடுத்து தோல்வியடைந்தது. இதனால், ரசிகர்களும் ஹர்திக் பாண்டியாவை தொடர்ந்து விமர்சித்து வந்தனர்.

அவரது பார்மும் மிக மோசமாக இருந்ததால், டி20 உலகக் கோப்பை அணியில் இருந்து அவரை நீக்க வேண்டும் என்று குரல்கள் எழுந்தன. இருப்பினும், பிசிசிஐ மற்றும் கேப்டன் ரோகித் சர்மா ஆகியோர் ஹர்திக் பாண்டியாவை தொடர்ந்து பயன்படுத்த முடிவு செய்தனர். பேட்டிங் மற்றும் பந்துவீச்சு என இரண்டிலும் பயன்படுத்துவதற்காக அவர் சேர்க்கப்பட்டார். இறுதிப் போட்டியில் கடைசி ஓவரில் 16 ரன்கள் எடுக்க வேண்டும் என்ற நிலையில், அவர் கடைசி ஓவரை வீச வந்தார்.

அதிரடியாக விளையாடிக் கொண்டிருந்த கிளாசனை 17வது ஓவரின் முதல் பந்திலேயே வீழ்த்திய ஹர்திக் பாண்டியா, 20வது ஓவரின் முதல் பந்தில் மில்லரை வீழ்த்தினார். அதற்கு முக்கிய காரணமாக இருந்தது சூர்யகுமார் யாதவ் பிடித்த அபாரமான கேட்ச். பின்னர் பேட்டியளித்த ஹர்திக் பாண்டியா, “இது மிகவும் சிறப்பு வாய்ந்த தருணம் என்று கூறினார். இது விவரிக்க முடியாத உணர்வு என்றும், இறுதியில் எல்லாம் எனக்கு வந்துவிட்டது என்று தெரிந்தபோது, நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்” என்றார்.

கேள்வி: கடந்த சில மாதங்களில் நீங்கள் நிறைய கடந்து விட்டீர்கள். உங்களைப் பற்றியும் நிறைய பேர் சொல்லியிருக்கிறார்கள்…

ஹர்திக் பாண்டியா: ஆம், ஹர்திக் பாண்டியா யார் என்று தெரியாமல் நிறைய பேர் பேசினார்கள். ஒவ்வொருவருக்கும் ஒரு கருத்து இருந்தது. அதை நான் பொருட்படுத்தவில்லை. ஆனால், ஒருபோதும் வார்த்தைகளால் பதிலளிக்கக் கூடாது என்பதை கடைப்பிடித்து வருகிறேன். செயல்களால் மட்டுமே எப்போதும் பதிலளிக்க முடியும். நான் எப்போதும் சோர்வடைய மாட்டேன் என்று எனக்கு தெரியும். வெற்றியிலும், தோல்வியிலும் கண்ணியமாக இருப்பது முக்கியம் என்று நான் நம்புகிறேன். அதை தக்க வைத்துக் கொள்ள முயற்சிக்கிறேன். ரசிகர்களுக்கு நான் சொல்ல விரும்பும் விஷயம் என்னவென்றால், அவர்கள் அழகாக இருக்க கற்றுக் கொள்ள வேண்டும். ஒரு சில நேரங்கள் தங்களை வெளிப்படுத்த சிறந்த வழிகளை கண்டுபிடிக்க வேண்டும்.

கேள்வி: விராட், ரோகித் ஓய்வு பெற்றுள்ளனர். அடுத்த டி20 உலகக் கோப்பைக்கு நீங்கள் கேப்டனாகலாம். எப்படி பார்க்கிறீர்கள்?

ஹர்திக் பாண்டியா: 2026 டி20 உலகக் கோப்பை வெகுதொலைவில் உள்ளது. இப்போதைக்கு ஒவ்வொரு வெற்றிக்கும் தகுதியான, இந்திய அணியின் இரண்டு ஜாம்பவான்களான ரோகித் மற்றும் விராட் குறித்து நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். இது அவர்களுக்கு நாம் வழங்கிய மிகச் சிறந்த பிரியாவிடையாக இருக்கலாம்.

கேள்வி: கடைசி ஓவரை வீச வந்தபோது மனதில் என்ன இருந்தது?

ஹர்திக் பாண்டியா: நான் அதை மிகவும் ரசித்தேன் என்று நினைக்கிறேன். பலருக்கு இதுபோன்ற வாய்ப்புகள் கிடைப்பதில்லை. இது அவர்களின் வாழ்க்கையை மாற்றும். அழுத்தத்தை போட்டுக் கொள்வதில் எந்த அர்த்தமும் இல்லை என்று எனக்குத் தெரியும். நான் எனது திறமையை வெளிப்படுத்த முயற்சித்தேன். நான் எப்பொழுதும் சிரமங்களை கடந்து சிரித்துக் கொண்டே இருக்க முயற்சித்தேன். இது ஒரு மிக நீண்ட புன்னகையாக இருக்கும் என்று நான் உறுதியளிக்கிறேன்.

கேள்வி: இந்த உலகக் கோப்பையில் வெவ்வேறு கட்டங்களில் பேட்டராகவும், பந்து வீச்சாளராகவும் ஜொலித்தீர்கள்…

ஹர்திக் பாண்டியா: இப்போது நாங்கள் வெற்றிபெற்றுள்ளதால், நான் ஸ்கோர் செய்யாவிட்டாலும் பரவாயில்லை என்று உணர்கிறேன். அணி வெற்றி பெறாதபோது தனிப்பட்ட ஆட்டங்கள் முக்கியமில்லை. ஆனால், எனக்கு வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் அணியின் நலனுக்காக ஏதாவது பங்களிக்க முடியும் என்பதில் நான் உறுதியாக இருந்தேன். நான் எப்போது அப்படித்தான் விளையாடி வருகிறேன். அது ஒரு ஓவராக இருந்தாலும், என்னால் முடிந்தவரை அதை செய்ய முயற்சிப்பேன்.

Ads
Recent Sports News
Trending News
Recent News
Prev
Next