நடிகை மம்தா மோகன்தாஸூக்கு என்னாச்சு..? லேட்டஸ்ட் போட்டோவால் ரசிகர்கள் ஷாக்!

cinema-actress-mamtha-mohandas-suffers-from-rare-skin-disease-called-vitiliko
  • Publisher : news18
  • Author : -
  • Last Update : 2024-06-30 15:24:00

நடிகை மம்தா மோகன் தாஸின் தற்போதைய புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.

2006 ஆம் ஆண்டு விஷால் நடிப்பில் வெளியான ‘சிவப்பதிகாரம்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவின் கதாநாயகியாக அறிமுகமானவர் தான் நடிகை மம்தா தாஸ். அந்த படத்தை தொடர்ந்து தமிழ் சினிமாவின் பக்கம் அவர் பெரிதாக தலைகாட்டவில்லை என்று தான் கூறவேண்டும். ஆனால்  மம்தா மோகன்தாஸ் மலையாள சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகை, நடிப்பது மட்டுமின்றி பாடுவது படங்கள் தயாரிப்பது என்று பன்முக திறமை கொண்டு விளங்குபவர் மம்தா. கர்நாடக மற்றும் ஹிந்துஸ்தானி இசையை முறையாக கற்றுத்தேர்ந்தவர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னணி நடிகர்கள் பலருடன் மலையாள சினிமாவில் ஜோடி போட்டுள்ளார் மம்தா, இவரது நடிப்பில் வெளியான பல படங்கள் நல்ல வரவேற்பை பெற்ற படங்கள். 2009 ஆம் ஆண்டு Hodgkin’s lymphoma ( லிம்ப் சிஸ்டத்தில் உருவாகும் ஒருவகை கேன்சர்) கேன்சர் நோயால் பாதிக்கப்பட்டார் மம்தா, அதில் இருந்து நீண்ட போராட்டத்திற்கு பிறகு குணமடைந்தார்.  2011 ஆம் பஹ்ரைனை சேர்ந்த தொழிலதிபரை திருமணம் செய்து கொண்ட மம்தா மனக்கசப்பின் காரணமாக ஒரே வருடத்தில் அவரைவிட்டு பிரிந்தார். விவாகரத்திற்கு பின் மீண்டும் நடிப்பதில் கவனம் செலுத்த தொடங்கினார் மம்தா மோகன் தாஸ்.

மலையாள சினிமாவில் கவனம் செலுத்தி வந்த நடிகை மம்தா மோகன்தாஸ், விஷாலின் எனிமி படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு மீண்டும் ரீஎன்ட்ரி கொடுத்தார். அதன் பின் தற்போது விஜய் சேதுபதியின் 50வது படம் மகாராஜாவில் மம்தா நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. தனது சமூகவலைத்தல பக்கத்தில் ஆக்ட்டிவாக இருக்கும் மம்தா, தனது புகைப்படங்களை அப்லோட் செய்வதை வழக்கமாக கொண்டவர்.

அப்படி அவர் தன் கைகளில் தோல் நிறம் மாறியிருப்பதை காட்டும் வகையில் பதிவிட்டிருந்த புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சில நாட்களுக்கு முன் நேர்காணல் ஒன்றில் தனக்கு அரியவகை விட்டிலிகோ என்ற தோல் நோயால் இருப்பதாக கடந்த ஆண்டு கண்டறிந்ததாக அவர் தெரிவித்தார், உடலில் இருக்கும் நிறமி செல்கள் இறந்தாலோ அல்லது தன் செயல்பாட்டை நிறுத்தினாலோ இந்த லிட்டிக்கோ என்ற நோய் வருமாம்.

இந்த நோய் பரவக்கூடியது இல்லை என்றும், ஆரம்பத்திலேயே இதை கண்டறிந்துவிட்டால் கட்டுப்படுத்திவிடலாம் என்றும் கூறப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் விட்டிலிகோ தினம் அனுசரிக்கப்படுகிறது. அதை குறிக்கும் வகையில் தான் நடிகை மம்தா தன் கையில் தோல் நிறமாறியிருப்பதை போட்டோ எடுத்து தன் இன்ஸ்டகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் என்று கூறப்படுகிறது.

Ads
Recent Cinema News
Trending News
Recent News
Prev
Next