விடாமுயற்சி படத்தின் படிப்பிடிப்பை முடித்துவிட்டு சென்னை திரும்பினார் நடிகர் அஜித்!!

cinema-actor-ajith-return-to-chennai-from-ajarbaijaan-after-vidaamuyarchi-shoot
  • Publisher : news18
  • Author : -
  • Last Update : 2024-07-02 17:53:00

அஜர்பைஜானில் நடைபெற்ற விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பில் பங்கேற்றுவிட்டு நடிகர் அஜித்குமார் சென்னை திரும்பினார்.

மகிழ் திருமேனி இயக்கிவரும் விடாமுயற்சி திரைப்படத்தில் நடிகர் அஜித் நடித்து வருகிறார். இந்த படத்தின் முதல் இரண்டு கட்ட படப்பிடிப்பு அஜர்பைஜானி விறுவிறுப்பாக நடந்து வந்தது. இந்த படப்பிடிப்பில் அஜித்துடன் திரிஷா, அர்ஜுன், ரெஜினா, பிரியா பவானி ஷங்கர், ஆரவ் மற்றும் பல நடித்தனர். முழுவீச்சில் நடந்து வந்த விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு நிதி சிக்கல் காரணமாக சில நாட்கள் நிறுத்திவைக்கப்பட்டது.

அந்த கேப்பில் நடிகர் அஜித், ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கம் Good Bad Ugly படத்தில் கதாநாயகனாக நடிக்க தொடங்கினார், படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு முடிந்த நிலையில், விடாமுயற்சி படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு ஜூன் 20ஆம் தேதி முதல் அஜர்பைஜானில்  மீண்டும் தொடங்கியது.  சில தினங்களுக்கு முன் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் இணையத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியது.

இந்நிலையில், விடா முயற்சி படப்பிடிப்பில் கலந்து கொண்டுவிட்டு அஜித் இன்று சென்னை திரும்பினார். சென்னை விமான நிலையம் வந்த நிலையில், ரசிகர்கள் அவருடன் செல்பி எடுக்க முண்டியடித்தனர்.

Trending News
Recent News
Prev
Next