"இனிமேல் என் பட தலைப்புகள் இப்படி தான் இருக்கும்" - நடிகர் விஜய் ஆண்டனி ஓபன் டாக்!

cinema-vijay-antonys-mazhai-pidikadha-manidhan-audio-launch
  • Publisher : news18
  • Author : -
  • Last Update : 2024-06-30 16:13:00

சினிமாவைப் பொறுத்தவரை தனக்கு சென்டிமென்ட் எதுவும் கிடையாது என நடிகர் விஜய் ஆண்டனி தெரிவித்துள்ளார்.

விஜய் மில்டன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி, மேகா ஆகாஷ், சத்யராஜ், சரத்குமார் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள ‘மழை பிடிக்காத மனிதன்’ திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னை சாலிகிராமத்தில் உள்ள பிரசாத் லேப்பில் நடைபெற்றது. இதில் விஜய் ஆண்டனி, தயாரிப்பாளர் தனஜெயன் உள்ளிட்ட பட குழுவினரும், சிறப்பு விருந்தினராக பிச்சைக்காரன் படத்தின் இயக்குனர் சசி மற்றும் தயாரிப்பாளர் டி.சிவா உள்ளிட்டோர் கலந்து கொண்டு பேசினர். மேடையில் பேசிய நடிகர் விஜய் ஆண்டனி, ’ நானும் இயக்குனர் விஜய் மில்டனும் 20 வருட நண்பர்கள். நாங்கள் அப்போதே இணைந்து தொழில் செய்ய திட்டமிட்டோம்.

விஜய் மில்டன் இயக்குனர் பாதையை தேர்ந்தெடுக்காமல் ஒளிப்பதிவாளராகவே இருந்திருந்தால் இந்தியாவின் தலை சிறந்த ஒளிப்பதிவாளராக விஜய் மில்டன் இருந்திருப்பார். விஜய் மில்டன் எழுதிய கோயம்பேடு என்ற ஒரு கதையை நான் படித்திருக்கிறேன். நான் அதில் நடிப்பதாகவும் இருந்தது ஆனால் அது நடக்கவில்லை. இதுவரை நான் செய்த படங்களில் மிகப்பெரிய அளவில் வந்திருக்க கூடிய படமாக இந்த ‘மழை பிடிக்காத மனிதன்’ படத்தை பார்க்கிறேன் என்றார்.

அவரை தொடர்ந்து தயாரிப்பாளர் டி. சிவா பேசுகையில், ‘முன்பு எல்லாம் திரையரங்கில் நல்ல வசூல் செய்து வெற்றி பெற்ற படங்கள் எல்லாம் 20 கோடி வரை டிஜிட்டல் விற்பனை ஆகும் ஆனால் தற்போது 3 கோடி ரூபாய்க்கு கூட விற்பனை ஆக வில்லை. தமிழ் சினிமாவில் திரையரங்கு ரசிகர்களை இழந்து விட்டோம், ஆந்திராவில் ஒவ்வொரு படமும் 100 கோடி 200 கோடி ரூபாய் வரையில் லாபம் என்கின்றனர். ஆனால் தற்போதைய தமிழ் தயாரிப்பாளர்கள் நிலமை மிக மோசமாக உள்ளது’ என்று கூறினார்.

தமிழ் சினிமாவில் நல்ல சகுனம் பார்ப்பதுண்டு தலைப்பு சரியாக இருக்க வேண்டும் என்று பார்ப்பதுண்டு அடுத்தடுத்த படங்களில் உங்களது தலைப்பு எப்படி இருக்கும் என்ற செய்தியாளரின் கேள்விக்கு பதிலளித்த விஜய் ஆண்டனி கூறுகையில்,’ இனியும் எனது படங்களின் தலைப்பு கரடு முரடாக இருக்கும் என்று பதில் அளித்தார். சினிமாவைப் பொறுத்தவரை எனக்கு சென்டிமென்ட் கிடையாது.

ராகு காலம் என்பது கெட்ட நேரம் என்றால் அந்த நேரத்தில் நான் படம் ஆரம்பித்து காட்டுகிறேன்.  ராகுகாலம் எமகண்டம் ஆகிய தலைப்புகளில் கூட நான் படம் பண்ண தயார். இதை நான் பதிவு செய்ய விரும்புகிறேன் இது என்னுடைய தலைப்பு" என்று கேளிக்கையாக பதில் அளித்தார்.

Ads
Recent Cinema News
Trending News
Recent News
Prev
Next