கேரளாவில் கோலாகலமாக நடந்து முடிந்த பிரபல நடிகையின் திருமணம்.. வைரல் போட்டோஸ்!

cinema-actress-meera-nandhan-married-at-the-age-of-33-photos-viral
  • Publisher : news18
  • Author : -
  • Last Update : 2024-06-30 09:59:00

வால்மிகி படத்தின் கதாநாயகியான நடிகை மீரா நந்தனுக்கு கேரளாவில் உள்ள குருவாயூர் கோயிலில் திருமணம் நடந்தது.

தமிழ், மலையாள சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் நடிகை மீரா நந்தன். 2008 ஆம் வெளியான ‘வால்மிகி’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவின் கதநாயகியாக அறிமுகமானார். வால்மிகி படத்தைத் தொடர்ந்து, அய்யனார், சண்டமாருதம், காதலுக்கு மரணமில்லை, நேர்முகம் உள்ளிட்ட படங்களில் மீரா நந்தன் நடித்துள்ளார். தமிழ் மட்டுமின்றி மலையாள திரையுலகில் இவர் பிரபல நடிகை என்பது குறிப்பிடத்தக்கது.

33 வயதாகும் மீரா நந்தனுக்கு செப்டம்பர் மாதம் நிச்சயதார்த்தம் முடிந்ததாகவும் விரைவில் திருமணம்  நடக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியானது. இரண்டு நாட்களுக்கு முன்பு  நடிகையின் இன்ஸ்டகிராம் பக்கத்தில் திருமணதிற்கு முந்தைய சடங்குகள் புகைப்படம் மற்றும் விடீயோக்களை பகிர்ந்திருந்தார். இந்த நிலையில், மீரா நந்தன், ஸ்ரீஜூ திருமணம்  கேரளாவில் உள்ள குருவாயூர் கோயிலில் நடந்து முடிந்தது.

மீரா நந்தனின் கணவர் ஸ்ரீஜூ லண்டனில் கணக்காளராக பணியாற்றி வருகிறார். இவர்களின் திருமணம் பெற்றோரால் முடிவு செய்யப்பட்ட திருமணம் என்பது குறிப்பிடத்தக்கது.  இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது திருமண புகைப்படங்களை பகிர்ந்துள்ளார் நடிகை மீரா நந்தன்.

திருமண வாழ்வில் அடியெடுத்து வைத்துள்ள நடிகை மீராவுக்கு திரைத்துறையினர் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Ads
Recent Cinema News
Trending News
Recent News
Prev
Next