வாவ்!!என்ன படம்யா... கல்கி படத்தை புகழ்ந்து தள்ளிய சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்.. என்ன சொல்லிருக்காரு தெரியுமா?

cinema-actor-rajinikanth-praised-kalki-team-for-the-extraordinary-movie
  • Publisher : news18
  • Author : -
  • Last Update : 2024-06-30 10:56:00

கல்கி திரைப்பட குழுவினருக்கு நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

நாக் அஸ்வின் இயக்கத்தில் உருவாகியுள்ள கல்கி 2898 AD திரைப்படம் கடந்த 27 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியானது. இப்படத்தில் பிரபாஸ், அமிதாப் பச்சன், கமல்ஹாசன், தீபிகா படுகேன், திஷா பதானி, துல்கர் சல்மான், ராஜமெளலி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். பிரம்மாண்டமாக உருவாகியுள்ள இத்திரைப்படம் உலகம் முழுவதும் முதல் நாளில், 191 கோடி ரூபாய் வசூலித்து சாதனை படைத்துள்ளது.

இந்த நிலையில், கல்கி திரைப்பட குழுவினருக்கு நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், கல்கி பார்த்துவிட்டதாகவும், என்னவொரு தரமான படம் என்றும் தெரிவித்துள்ளார்.

இயக்குநர் நாக் அஸ்வின் இந்திய சினிமாவை வேற லெவலில் கொண்டு சென்றிருப்பதாகவும், நண்பர்கள் அமிதாப் பச்சன், பிரபாஸ், கமல்ஹாசன், தீபிகா படுகோன் அனைவருக்கும் வாழ்த்துகள் என்றும் குறிப்பட்டுள்ளார். கல்கி படத்தின் இரண்டாம் பாகத்திற்காக காத்திருப்பதாகவும் ரஜினிகாந்த் பதிவிட்டுள்ளார்.

ரஜினிகாந்தின் இந்த X பதிவு தற்போது ரசிகர்களால் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது. கல்கி போடத்திற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருவது குறிப்பிடத்தக்கது.

Ads
Recent Cinema News
Trending News
Recent News
Prev
Next