தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக 2 முறை டக் அவுட் ஆக காரணம் என்ன ? சஞ்சு சாம்சன் பதில்
புதுடெல்லி,
சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 4 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடியது. இந்த தொடரை இந்தியா 3-1 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது. முன்னதாக இந்த ஆட்டத்தில் சஞ்சு சாம்சன் அடித்த சதம் டி20 கிரிக்கெட்டில் நடப்பாண்டில் (2024) அவரது 3-வது சதமாக பதிவானது. இதன் மூலம் சர்வதேச டி20 கிரிக்கெட் வரலாற்றில் ஒரு வருடத்தில் 3 சதங்கள் அடித்த முதல் வீரர் என்ற மாபெரும் சாதனையை அவர் படைத்துள்ளார். சஞ்சு சாம்சன் தற்போது அணியின் தொடக்க ஆட்டக்காரராக அசத்தல் ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்.
இந்த நிலையில்,தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான இந்த தொடரில் 2 போட்டிகளில் சஞ்சு சாம்சன் சதமடித்தார். மற்ற 2 போட்டிகளில் டக் அவுட் ஆகி ஆட்டமிழந்தார் . இந்த நிலையில் இது தொடர்பாக சஞ்சு சாம்சன் கூறியதாவது ,
என் வாழ்க்கையில் ஏராளமான தோல்விகளைச் சந்தித்துள்ளேன். முதல் போட்டியில் சதம் அடித்த பின், அடுத்த 2 போட்டிகளிலும் டக் அவுட்டாகி வெளியேறி இருக்கிறேன். தொடர்ந்து 2 முறை டக் அவுட்டான பின், ஏராளமான சிந்தனைகள் ஓடிக்கொண்டே இருந்தது.ஆனாலும் என் மீது மீண்டும் நம்பிக்கை வைத்து கடினமாக உழைத்ததற்குச் சரியான பலன் கிடைத்திருக்கிறது ..கடந்த முறை சதம் விளாசியபோது அதிகமாகப் பேசிவிட்டேன். அதன்பின் 2 முறை டக் அவுட்டாகினேன்" எனத் தெரிவித்துள்ளார்.