Maharashtra Elections 2024: நாளை பங்குச் சந்தை இயங்குமா?
மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள 288 தொகுதிகளுக்கு நாளை ஒரே கட்டமாக வாக்குப் பதிவு நடைபெறுகிறது. இதில் பதிவாகும் வாக்குகள் நவம்பர் 23ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கிறது.
இந்தத் தேர்தலில், ஆளும் கூட்டணி அரசான பா.ஜ.க - சிவசேனா (ஏக்நாத் ஷிண்டே பிரிவு), அஜித் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சி கூட்டணியோடு களமிறங்கவுள்ளது. அதே போல், இந்தியா கூட்டணியில் உள்ள காங்கிரஸ், சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சி, உத்தவ் தாக்கரேவின் சிவசேனா ஆகிய கட்சிகள் கூட்டணி சேர்ந்து களமிறங்கியுள்ளது.
ஒவ்வொரு தேர்தலுக்கும் அந்த மாநிலத்தில் மக்கள் வாக்களிக்க ஏதுவாக பொது விடுமுறை அறிவிக்கப்படும். அந்த வகையில் நாளை (20ம் தேதி) மகாராஷ்டிராவில் பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதேசமயம், மகாராஷ்டிராவில் எவையெல்லாம் இயங்கும், எவற்றுக்கு எல்லாம் விடுமுறை என்ற தகவலும் வெளியாகியுள்ளது.
விடுமுறை:
அனைத்து தனியார் மற்றும் பொதுத் துறை வங்கிகளுக்கும் நாளை பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
மும்பை பங்குச் சந்தை மற்றும் தேசிய பங்குச் சந்தையான (நிஃப்டி) விடுமுறை.
மாநிலத்தில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் பொது விடுமுறை.
மாநிலத்தில் அனைத்து அரசு நிறுவனங்களுக்கும் பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தனியார் நிறுவனங்களுக்கும் கட்டாயம் விடுமுறை அறிவிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதேசமயம், அத்தியாவசிய பணிகளில் இருப்பவர்கள் நான்கு மணி நேரம் மட்டும் பணிக்கு வரவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மாநிலத்தில் மதுபான கடைகளை அடைக்க உத்தரவு.
செயல்படுபவை:
மருத்துவமனைகள், மருந்து கடைகள், மெட்ரோ, பேருந்துகள் உள்ளிட்டவை இயங்கும். அதேபோல், காவல்துறை, தீயணைப்புத் துறை உள்ளிட்டவை இயங்கும்.