உலகக் கோப்பை கேரம் சாம்பியன்ஷிப்... சாதித்த தமிழ்நாட்டின் ’தங்க மகள்’!

other-sports-tamilnadu-player-kasima-won-carrom-world-championship-nw-mma
  • Publisher : News18 (Ta)
  • Author : -
  • Last Update : 2024-11-17 20:00:00

6-வது உலகக் கோப்பை கேரம் போர்டு சாம்பியன்ஷிப் தொடரில் தமிழ்நாட்டைச் சேர்ந்த காசிமா மகுடம் சூடியுள்ளார்.

6-வது உலகக் கோப்பை கேரம் சாம்பியன்ஷிப் தொடரானது அமெரிக்காவில் நடைபெற்றது. இதில் தமிழ்நாட்டில் இருந்து காசிமா, நாகஜோதி, மித்ரா, மரிய இருதயம் ஆகிய வீராங்கனைகள் பங்கேற்றனர். இதில் சென்னை புது வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த 17 வயதான காசிமா, மகளிர் தனிப்பிரிவு, இரட்டையர் பிரிவு, குழு போட்டி என மூன்று பிரிவுகளிலும் தங்கம் வென்று சாதனை புரிந்துள்ளார்.

வரும் 21ஆம் தேதி அமெரிக்காவில் இருந்து காசிமா பதக்கத்தோடு நாடு திரும்ப உள்ளார். காசிமாவின் தந்தை ஆட்டோ ஓட்டுநராக பணியாற்றி வருவது குறிப்பிடத்தக்கது.

முதல்வர் வாழ்த்து: இதற்கிடையே, “அமெரிக்காவில் நடைபெற்ற ஆறாவது கேரம் போர்டு உலகக் கோப்பையில் சென்னையைச் சேர்ந்த நம் தமிழ் மகள் காசிமா மூன்று பிரிவுகளில் முதலிடம் பெற்றுள்ளதற்குப் பாராட்டுகள்! வாழ்த்துகள்! பெருமை கொள்கிறேன் மகளே… எளியோரின் வெற்றியில்தான் திராவிடன் மாடலின் வெற்றி அடங்கியிருக்கிறது!” என்று காசிமாவுக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதேபோல் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ள பதிவில், “சென்னை புது வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த தங்கை காசிமா, அமெரிக்காவில் நடைபெற்ற 6-ஆவது உலகக்கோப்பை கேரம் சாம்பியன்ஷிப் போட்டியில் 3 பிரிவுகளில் தங்கம் வென்று உலக அளவில் சாதனை படைத்துள்ளார்.

கடந்த ஜூலை மாதம், தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளை மூலம் காசிமாவின் பயணம், பயிற்சிக்காக ரூ.1.50 லட்சத்தை நாம் வழங்கி வாழ்த்தியிருந்த நிலையில், 3 தங்கப் பதக்கங்களை வென்று தமிழ்நாட்டுக்கு பெருமைத் தேடித்தந்துள்ளார். தங்கை காசிமாவின் வெற்றிப்பயணம் தொடரட்டும்!” என்று தெரிவித்துள்ளார்.

Ads
Recent Sports News
Trending News
Recent News
Prev
Next