டெல்லியில் கைதான சீனா நபர்... விசாரணையில் வெளியான திடுக்கிடும் தகவல்கள்! - பின்னணி என்ன?

chinese-person-arrested-in-delhi-startling-information-revealed-in-the-investigation-what-is-the-background-nw-kpk
  • Publisher : News18 (Ta)
  • Author : -
  • Last Update : 2024-11-19 18:16:00

டெல்லியில் சீனாவை சேர்ந்த நபர் சுற்றிவளைத்து கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பங்குச்சந்தைகளில் முதலீடு செய்தால் அதிகம் பணம் தருவதாகக் கூறி 43 லட்சம் ரூபாய் மோசடி செய்ததாக சீனாவைச் சேர்ந்த Fang Chinjin என்ற நபர் மீது புகார் எழுந்தது. இதையடுத்து, இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த டெல்லி ஷாத்ரா போலீசார் ஃபாங்கிடம் நடத்திய விசாரணையில் வாட்ஸ் ஆப் குழுக்களை ஆரம்பித்து பலரிடம் இதுபோன்ற மோசடிகளை செய்தது தெரியவந்தது.

ஆந்திரா மற்றும் உத்தரபிரதேசத்தில் சைபர் குற்றங்கள் மற்றும் பணமோசடி செய்ததாகவும், அவர் வைத்திருந்த வங்கிக்கணக்குகள் மீது 17 புகார்கள் இருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து அவரிடம் நடத்திய விசாரணையில் 100 கோடி ரூபாய் வரை ஃபாங்க் மோசடியில் ஈடுபட்டதும் அம்பலமாகியுள்ளது.

Ads
Recent National News
Trending News
Recent News
Prev
Next