இந்திய அணியில் இடம்பெறும் புதிய ஆல்ரவுண்டர்… அடுத்த ஹர்திக் பாண்ட்யா இவர்தானா?

cricket-ind-vs-aus-gavaskar-border-trophy-due-to-shubman-gill-injury-this-youngster-likely-to-part-of-playing-11-mst
  • Publisher : News18 (Ta)
  • Author : -
  • Last Update : 2024-11-19 20:51:00

இந்திய கிரிக்கெட் அணியில் சுப்மன் கில்லுக்கு காயம் ஏற்பட்டிருப்பதால் அவருக்கு பதிலாக இளம் ஆல் ரவுண்டர் நிதிஷ்குமார் ரெட்டி விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட பார்டர் - கவாஸ்கர் தொடரில் விளையாடுகிறது. இந்த தொடரில் இந்திய அணி 4 போட்டிகளில் வெற்றி பெற்றால் மட்டுமே உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் நேரடியாக பங்கேற்க முடியும். ஏற்கனவே இந்திய மண்ணில் நியூசிலாந்து அணிக்கு எதிரான 3 போட்டிகளில் இந்திய அணி தோல்வி அடைந்தது.

இத்தகைய நெருக்கடியான சூழலில் வரும் 22ஆம் தேதி ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் ஆரம்பமாகிறது. இந்த தொடரில் இந்திய அணியின் நட்சத்திர ஆட்டக்காரர் சுப்மன் கில் காயம் அடைந்துள்ளார். இதனால் விளையாடும் 11 வீரர்களில் இளம் ஆல் ரவுண்டர் நிதிஷ்குமார் ரெட்டி விளையாட அதிக வாய்ப்பு உள்ளது.

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் இடம் பெற்றுள்ள நிதிஷ்குமார் தனது அதிரடியான பேட்டிங் மற்றும் பந்துவீச்சால் மதிப்புமிக்க வீரராக மாறியுள்ளார். இந்திய அணியில் இடம் பெற்ற அவர் வங்கதேசத்திற்கு எதிரான டி20 தொடரில் அறிமுகமானார்.

21 வயதாகும் நிதிஷ்குமார் ரெட்டி தனக்கு கிடைக்கும் வாய்ப்பை சிறந்த முறையில் பயன்படுத்தி அணியில் நிரந்தர இடம் பிடிப்பார் என அவரது ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர். கட்டாய வெற்றி என்ற நெருக்கடியான சூழலில் இந்திய அணி களம் காண உள்ளதால், இந்த பார்டர் - கவாஸ்கர் டெஸ்ட் கிரிக்கெட் தொடர் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

Ads
Recent Sports News
Trending News
Recent News
Prev
Next