நிரப்ப முடியாத இடைவெளி: ஏ.ஆர் ரகுமானை விட்டு பிரிகிறேன்... மனைவி சாய்ரா அறிவிப்பு

ar-rahman-wife-saira-banu-are-separating-after-29-years
  • Publisher : News18 (Ta)
  • Author : -
  • Last Update : 2024-11-19 23:08:00

AR Rahman Divorce: இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானை விட்டு பிரிவதாக மனைவி சாய்ரா பானு அறிவித்துள்ளார். திருமணமாகி 29 ஆண்டுகள் கடந்த நிலையில் கணவர் ஏ.ஆர் ரகுமானை விட்டு பிரிவதாக மனைவி சாய்ரா அறிவித்துள்ளார். இருவருக்குமிடையே நிரப்ப முடியாத இடைவெளி ஏற்பட்டுள்ளதால் விவாகரத்து முடிவை எடுத்ததாக சாய்ரா  தெரிவித்தார்.

இதுகுறித்து சாய்ரா தரப்பில் இருந்து வெளியிடப்பட்ட அதிகாரப்பூர்வ அறிவிப்பில், திருமணமாகி பல வருடங்களுக்குப் பிறகு, கணவர் ஏ.ஆர். ரஹ்மானை விட்டுப் பிரிவதற்கான கடினமான முடிவை எடுத்துள்ளேன். உறவில் ஏற்பட்ட உணர்ச்சிப்பூர்வ முறிவுகளுக்கு பின் எடுக்கப்பட்ட முடிவு இது. ஒருவருக்கொருவர் ஆழமான அன்பைத் தொடர்ந்து வந்த போதிலும்,  சில முரண்பாடுகள் தங்களுக்கு இடையேயான ஒரு தீர்க்க முடியாத இடைவெளியை உருவாக்கிவிட்டன. இந்த முரண்களை சரி செய்து இணைப்பை உருவாக்குவதற்கான முயற்சியில் இருவரும் தோல்வி அடைந்துவிட்டதாக உணர்கிறோம் என்று கூறப்பட்டது.

மேலும் அதில், தனது வாழக்கையில் இது மிகவும் சவாலான அத்தியாயம் என்றும், தனது தனியுரிமைகளுக்கு மதிப்பளித்து புரிதலுடன் நடக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.

Ads
Recent National News
Trending News
Recent News
Prev
Next