உ.பியில் 100-க்கும் மேற்பட்டோர் இறக்க காரணம் என்ன? அதிர்ச்சி தகவல்

up-hathras-stampede-live-updates-107-killed-at-satsang-suffocation-primary-reason-death-toll-likely-to-rise
  • Publisher : news18
  • Author : -
  • Last Update : 2024-07-02 19:51:00

உத்தரப் பிரதேச மாநிலம் ஹத்ராஸில் நடந்த ஆன்மீக சொற்பொழிவு நிகழ்ச்சியின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி குழந்தைகள் உட்பட 100 பேர் உயிரிழந்திருக்கலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

உத்தரபிரதேச மாநிலம் ஹத்ராஸ் மாவட்டத்தில் உள்ள புல்ராய் கிராமத்தில் போலே பாபா என்ற சாமியார் சத்சங் என்ற இந்துமத பிரசார கூட்டம் நடத்தினார். இந்த மத நிகழ்வின் கூட்ட நெரிசலில் சிக்கி இதுவரை 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். அவர்களில் பெரும்பாலானோர் பெண்கள் ஆவர். அந்த மத பிரசார கூட்டத்தில் பங்கேற்ற 100-க்கும் மேற்பட்டோர் கூட்டநெரிசலில் சிக்கி மயங்கி விழுந்தனர். அவர்கள் சரக்கு வேன்களில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

உயிரிழந்தவர்களின் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு வெளியே வைக்கப்பட்டுள்ள வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனிடையே, ஹத்ரஸ் அரசு மருத்துவமனையில் சிகிச்சையளிக்க போதிய மருத்துவர்கள் இல்லாததால் உயிரிழப்பு அதிகரிப்பதாக படுகாயம் அடைந்தவர்களின் உறவினர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

ஹத்ராஸ் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு உத்தரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் இரங்கல் தெரிவித்துள்ளார். சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்பு பணிகளை துரிதப்படுத்துமாறு அதிகாரிகளுக்கு யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார். மேலும் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ரூ.2 லட்சம் மற்றும் காயமடைந்தவர்களுக்கு ரூ.50,000 நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது.

Ads
Recent National News
Trending News
Recent News
Prev
Next