இந்த ஓய்வு காலத்திட்டத்தில் முதலீடு செய்தால் மாதம் ரூ.30,000 வரை பென்ஷன் கிடைக்கும்! முழு விவரம்

heres-how-to-invest-in-nps-and-receive-a-pension-of-rs-30000-per-month
  • Publisher : news18
  • Author : -
  • Last Update : 2024-07-02 20:21:00

ஓய்வு காலத்திற்கான திட்டமிடல் என்பது மிகவும் அவசியமான ஒன்று. நாம் வேலைக்கு சென்று கொண்டிருக்கும் பொழுது இருந்த நம்முடைய வாழ்க்கை தரத்தை தொடர்ந்து பராமரிப்பதற்கு ஓய்வு கால திட்டமிடல் உதவுகிறது. ஒருவேளை உங்களுடைய ஓய்வு காலத்தை சிறப்பாக அமைத்துக் கொள்ள விரும்புகிறீர்கள் என்றால் கட்டாயமாக அதற்கான திட்டமிடலை நீங்கள் இளமையாக இருக்கும் பொழுதிலிருந்தே ஆரம்பிக்க வேண்டும்.

ஓய்வு காலத்திற்கு பிறகு பொருளாதார சுதந்திரத்தை அடைவதற்கு நல்ல ஒரு ஓய்வுகால திட்டத்தில் முதலீடு செய்யலாம். இது நீங்கள் ஓய்வு பெற்ற பிறகு உங்களுக்கு வழக்கமான வருமானத்தை தரும். இவ்வாறு இருக்க நீங்கள் ஓய்வு பெற்று விட்டீர்கள் என்ற ஒரு எண்ணமே உங்களுக்கு தோன்றாது. யாரையும் நம்பி இருக்க வேண்டிய சூழ்நிலையும் உண்டாகாது. உங்களுக்கான செலவுகளை நீங்களே பார்த்துக் கொள்ளலாம். இந்த காரணத்திற்காகவே பல்வேறு விதமான ஓய்வு காலத் திட்டங்கள் வங்கிகள் மற்றும் தபால் நிலையங்கள் மூலமாக நமக்கு கிடைக்கிறது.

அந்த வகையில் நேஷனல் பென்ஷன் ஸ்கீம் (National Pension Scheme - NPS) என்பது இந்தியாவில் மிகவும் பிரபலமான ஓய்வு கால திட்டமாக கருதப்படுகிறது. NPS என்பது சந்தையுடன் தொடர்புடைய ஒரு ஓய்வு காலத்திட்டம். இதில் எவ்வளவு முதலீடு செய்ய வேண்டும் என்பதை நீங்களே முடிவு செய்து கொள்ளலாம். மேலும் இது உங்களுடைய ஓய்வு காலத்திற்கு சேமிப்பதற்கு உதவுகிறது.

NPS: மாதம் 30,000 ரூபாய் பென்ஷன் பணம் பெறுவது எப்படி?

உங்களுடைய 21 வது வயதில் நேஷனல் பென்ஷன் திட்டத்தில் ஒவ்வொரு மாதமும் 2,650 ரூபாய் பணத்தை நீங்கள் முதலீடு செய்து வருவதாக வைத்துக் கொள்வோம். இவ்வாறு அடுத்த 39 வருடங்களுக்கு நீங்கள் முதலீடு செய்யும் பொழுது, 60வது வயதில் நீங்கள் ஓய்வு பெறும் பொழுது அதற்கு பிறகான காலத்தில் ஒவ்வொரு மாதமும் 30,000 ரூபாயை பென்ஷனாக பெறலாம்.

NPS: இதற்கான கணக்கீட்டை இப்பொழுது தெரிந்து கொள்ளுங்கள்

தற்போதைய வயது: 21 வருடங்கள்

ஓய்வு கால வயது: 60

பங்களிப்பு: ஒவ்வொரு மாதமும் 2,650 ரூபாய்

எதிர்பார்க்கப்படும் ரிட்டன்: 10%

இந்த கணக்கீட்டில் ஒருவர் முதலீடு செய்து வரும் பொழுது அவர் இறுதியாக 1,52,66,310 ரூபாய் என்ற தொகையை மொத்தமாக முதலீடு செய்திருப்பார்.

இந்த மொத்த தொகையிலிருந்து 60% தொகையை நீங்கள் ஓய்வு பெற்ற பிறகு எடுத்துக் கொள்ளலாம் (உங்களுடைய ஓய்வு கால வயதில் 60% பணத்தை மட்டுமே அதிகபட்சமாக வித்ட்ரா செய்வதற்கு அனுமதிக்கப்படுவீர்கள்). இந்த சூழ்நிலையில் உங்களிடம் மீதம் 40% பணம் மறுமுதலீடு செய்வதற்கு ஆனுவிட்டியாக இருக்கும்.

அரசு இந்த பணத்தை கடனீட்டு திட்டங்கள் அல்லது கார்ப்பரேட் பாண்டுகளில் முதலீடு செய்து அதன் மூலமாக உங்களுக்கு ஒவ்வொரு மாதமும் நிலையான வருமானம் கிடைப்பதை உறுதி செய்கிறது. ஒருவேளை இந்த பணம் மூலமாக உங்களுக்கு 6 சதவீத ரிட்டன் கிடைத்தால் பின்னர்-

ஆனுவிட்டியில் நீங்கள் முதலீடு செய்த தொகை ரூபாய் 91,59,786.

எதிர்பார்க்கப்படும் மாத பென்ஷன் தொகை: ரூ. 30,533 ஆகும்.

Trending News
Recent News
Prev
Next