புஷ்பா, பாகுபலியை விட அதிக பட்ஜெட்… இந்தியாவிலேயே செலவுமிக்க தொலைக்காட்சி தொடர் இதுதான்…

cinema-do-you-know-indias-most-expensive-tv-show-porus-its-budget-is-more-than-bahubali-pushpa-movies-mst
  • Publisher : News18 (Ta)
  • Author : -
  • Last Update : 2024-11-19 20:40:00

பாகுபலி மற்றும் புஷ்பா படங்களை விடவும் அதிக பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்திய தொலைக்காட்சி தொடர் தற்போது இணையத்தில் அதிக கவனம் பெற்றுள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் படங்களை தயாரிப்பதற்கான பட்ஜெட் கணிசமாக அதிகரித்துக் கொண்டு வருகிறது. அதே நேரம் படங்களை வியாபாரமாக்கும் தளங்களும் அதிகரித்திருப்பதால் தயாரிப்பாளர்கள் பிரம்மாண்டமாக படங்களை தயாரித்து வருகின்றனர். பாகுபலி, பிரம்மாஸ்திரா, கேஜிஎப் போன்ற படங்கள் சுமார் 300 கோடிக்கும் அதிகமான பட்ஜெட்டில் உருவாக்கப்பட்டவை.

தற்காலத்தில் நடக்கும் கதைகளை படமாக்குவதை விடவும் வரலாற்று படங்களை எடுக்கும்போது பட்ஜெட் அதிகரிக்கிறது. இவை ஒரு பக்கம் இருந்தாலும் இந்திய தொலைக்காட்சி தொடர்களில் சுமார் ரூ. 500 கோடிக்கும் அதிகமான செலவில் ஒரு நெடுந்தொடர் தயாரிக்கப்பட்டது. 2017 மற்றும் 2018 ஆம் ஆண்டுகளில் வெளியிடப்பட்ட இந்த தொடர் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது.

போரஸ் என்பதுதான் அந்த தொலைக்காட்சி தொடருடைய பெயர். 7 ஆண்டுகளுக்கு முன்பு இந்த மெகா தொடர் 500 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாக்கப்பட்டது. அப்படி என்றால் தற்போதைய சூழலில் இந்த தொகை மிக அதிகமாகும். கிமு நான்காம் நூற்றாண்டில் நடந்த சம்பவங்களை அடிப்படையாக வைத்து இந்த மெகா தொடர் உருவாக்கப்பட்டது.

கிரேக்க மன்னன் அலெக்சாண்டர் உடன் மோதிய இந்திய மன்னரான போரஸின் உண்மை வரலாற்றை இந்த போரஸ் மெகா தொடர் எடுத்துக் கூறியது. இந்த மெகா தொடருக்கு உண்மையான தோற்றத்தை கொடுப்பதற்கு தயாரிப்பாளர்கள் கோடிக்கணக்கில் முதலீட்டை அள்ளிக் குவித்தனர்.

மிகவும் குவாலிட்டியான கிராபிக்ஸ் காட்சிகளுடன் இந்த மெகா தொடர் காண்போரை கவர்ந்தது. மொத்தம் 299 எபிசோடுகளை கொண்டதாக இந்த போரஸ் மெகா தொடர் உருவாக்கப்பட்டது. அப்படி பார்க்கும்போது ஒவ்வொரு எபிசோடுக்கும் சராசரியாக 1 கோடியே 70 லட்சம் ரூபாய் செலவிடப்பட்டுள்ளது.

சிறந்த தொலைக்காட்சி தொடருக்கான விருது உட்பட ஏராளமான தேசிய அளவிலான விருதுகளை இந்த போரஸ் தொடர் வென்றுள்ளது.

Ads
Recent Cinema News
Trending News
Recent News
Prev
Next