"இஷ்டப்பட்டு நடித்த பாலாவின் வணங்கானை கஷ்டம் என்று சொல்ல முடியாது" - அருண் விஜய்
தமிழ் சினிமாவில் பிரபலமானவர் நடிகர் அருண் விஜய், இவர் பிரபல நடிகர் விஜயகுமாரின் ஒரே மகன். சினிமா பின்புலத்தோடு இவர் நடிப்பில் களமிறங்கினாலும் இவருக்கு பெயர் சொல்லும் படமாக அமைந்தது ஒரு சில படங்கள் மட்டும்தான். நடிகர் ஷியாம் நடித்த ‘இயற்கை’ என்ற படத்தில், சப்போர்டிங் நடிகராக அருண் விஜய் நடித்திருந்தார். அந்த படம் சூப்பர் ஹிட்டான நிலையில், சிறந்த மொழிப் படத்திற்கான தேசிய விருதை தட்டிச் சென்றது. இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில், நடிகர் அஜித் நடித்த ‘என்னை அறிந்தால்’ திரைப்படத்தில் அருண் விஜய் வில்லனாக நடித்திருந்தார்.
அந்தப் படத்தில் இவரது நடிப்பு அட்டகாசமாக இருந்தது. இதனால், தமிழ் சினிமா ரசிகர்களின் பாராட்டுகளைப் பெற்றார். குறிப்பாக, நார்வே தமிழ் திரையுலக விழா, எடிசன் அவார்ட்ஸ் போன்ற அமைப்புகளின் சார்பில் சிறந்த வில்லன் என்ற விருது வழங்கப்பட்டது. அருண் விஜயின் நடிப்பில் கடைசியாக வெளியான படம் “மிஷன் சாப்டர் 1”. இந்த படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை கொடுத்தது. தற்போது இயக்குநர் பாலா இயக்கத்தில் ‘வணங்கான்’ படத்தில் நடித்து முடித்துள்ள அருண் விஜய் படத்தின் ரிலீசுக்காக காத்திருக்கிறார், படம் விரைவில் வெளியாகவுள்ளது.
இந்த நிலையில், தனது பிறந்த நாளில் அருண் விஜய் மற்றும் அவரது ரசிகர்கள் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அரசு மருத்துவமனையில் ரத்த தானம் செய்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அருண் விஜய், ஆண்டுதோறும் ரசிகர்கள் சார்பில் ரத்ததான முகாம் நடத்துவது மகிழ்ச்சி அளிப்பதாகக் கூறினார். ‘இஷ்டப்பட்டு பாலாவின் வணங்கான் படத்தில் நடித்ததை கஷ்டம் என்று சொல்ல முடியாது’ எனத் தெரிவித்தார். மருத்துவமனைக்குச் சென்ற அருண் விஜயுடன் தூய்மை பணியாளர்கள், பொதுமக்கள் செல்ஃபி எடுத்து மகிழ்ந்தனர்.
‘அஜித் சார் உச்சம் அவருக்கு யாரும் போட்டி கிடையாது. அதுமட்டுமில்லாமல் அவருடைய ரசிகர்கள் என்னை அவ்வளவு நேசிக்கிறார்கள்.’ பின்னர் விஜயின் அரசியல் பிரவேசம் குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர் கூறுகையில், ‘நடிகர் விஜய் அரசியல் பயணம் வெற்றிகரமாக அமைய என்னுடைய வாழ்த்துக்கள்’ என்றார். அஜித் குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், ‘அஜித் சார் உச்சம் அவருக்கு யாரும் போட்டி கிடையாது. அதுமட்டுமில்லாமல் அவருடைய ரசிகர்கள் என்னை அவ்வளவு நேசிக்கிறார்கள். போட்டி எதுவும் கிடையாது’ என்றார். அனைத்து மாவட்டங்களிலும் ஆண்டுதோறும் ரசிகர்களின் சார்பில் இரத்த தான முகாம் நடைபெற்று வருகிறது. இதுபோன்று தொடர்ந்து நடத்துவது என்பது மகிழ்ச்சியாக இருக்கின்றது என்று பதிலளித்தார்.