8.2 IMDB ரேட்டிங்.. 22 விருதுகள்,பெற்று பிளாக்பஸ்டர் ஹிட் அடித்த தமிழ் படம் எது தெரியுமா?

cinema-8-point-2-imdb-rating-do-you-know-which-tamil-film-has-won-22-awards-and-scored-a-blockbuster-hit-nw-vn
  • Publisher : News18 (Ta)
  • Author : -
  • Last Update : 2024-11-19 17:44:00

2007ம் ஆண்டு அதிகம் பேசப்பட்ட படங்களில் ஒன்று, தியேட்டர்களில் இந்த படத்திற்கான வரவேற்பு மாபெரும் அளவில் இருந்தது. ரசிகர்களின் நெஞ்சங்களை வென்ற எந்த படத்தை பற்றி நாம் பேசுகிறோம் என்று தெரிகிறதா? அமீர் இயக்கத்தில் வெளியான ‘பருத்திவீரன்’ படம்தான் அது. இந்த படத்தில் கார்த்தி, பிரியாமணி, சரவணன், பொன்வண்ணன், கஞ்சா கருப்பு என பலரும் நடித்திருந்த இந்த படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருப்பார். தமிழ் சினிமாவில் தனக்கான இடத்தை இன்று வரையிலும் நங்கூரமாய் பிடித்துள்ளது ‘பருத்திவீரன்’ திரைப்படம். திரையரங்குகளில் 100 நாட்களுக்கும் மேல் ஓடி மாபெரும் வெற்றி பெற்ற படம். மதுரை மண்வாசத்தை, வீரத்தை, திமிரும் கோபத்தையும் கண்முன் கொண்டு வந்திருப்பார் இயக்குநர் அமீர். படத்தில் நடித்த நடிகர்களை அந்த கதாபாத்திரங்களாவே செதுக்கிய அமீர்.

மதுரை பேச்சு, நடை, பாவனை, தோரணை என பிசிறே இல்லாமல் கதைக்கு தேவையான ஒட்டுமொத்தத்தையும் திரையில் காண்பித்திருப்பார் இயக்குநர். ஒரு விழாவில் ரஜினிகாந்த், “பருத்திவீரன் படத்தை பார்த்துவிட்டு இது உண்மையாவே கார்த்தியின் முதல் படமா என்று யோசித்தேன்..” என்று கூறினார். அந்த அளவுக்கு பருத்திவீரன் கதாபாத்திரத்தில் கார்த்தி வேறு லெவலில் நடித்திருப்பார். இன்றும் பிரியாமணியை தமிழ் ரசிகர்கள் ‘முத்தழகு’ என்று தான் அடையாளம் கொள்வார்கள். அந்த அளவுக்கு முத்தழகு கதாபாத்திரம் மக்கள் மத்தியில் ரசிக்கப்பட்டது.

படத்தின் பாடல்கள் மக்கள் மத்தியில் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது. இந்த படத்திற்காக இயக்குநர் முதல் நடிகர்கள் வரை போட்ட உழைப்பும் மெனக்கெடல்களும் எண்ணில் அடங்கா. பருத்திவீரன் படத்தின் கிளைமாக்ஸ் இன்றும் காண்போரை கலங்கவைக்கும் ஒன்று. பாக்ஸ் ஆபீசில் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்த இந்த படம் ஐஎம்டிபி ரேட்டிங்கில் 10க்கு 8.2 ரேட்டிங் பெற்றுள்ளது. இத்தனை புகழுக்கு சொந்தமான மக்கள் பேராதரவில் வெற்றி பெற்ற இந்த படம் எத்தனை விருதுகளை வென்றுள்ளது தெரியுமா?

சிறப்பான நடிப்பிற்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருதை வென்றார் பிரியாமணி, அதே சமயம் சிறந்த நடிகருக்கான பிலிம்பேர் விருதை நடிகர் கார்த்தி வென்றார். இது மட்டுமல்லாமல் பருத்திவீரன் திரைப்படம் மொத்தம் 22 விருதுகளை வென்றது குறிப்பிடத்தக்கது. இந்த சூப்பர் ஹிட் திரைப்படம் இதுவரை எந்த ஒரு ஓடிடி தளத்திலும் வெளியாகவில்லை. இந்த படத்தின் இந்தி வெர்ஷன் யூடியூப்பில் காணக்கிடைக்கிறது.

Ads
Recent Cinema News
Trending News
Recent News
Prev
Next