நயன்தாரா, விக்கி காதல்.. தனுஷ் சொன்னது என்ன? - டாக்குமென்ட்டரியில் வெளிப்படுத்திய ராதிகா

cinema-dhanush-tells-about-nayanthara-and-vignesh-shivan-love-nw-mma
  • Publisher : News18 (Ta)
  • Author : -
  • Last Update : 2024-11-18 08:11:00

நயன்தாரா - விக்னேஷ் சிவன் காதல் குறித்து நானும் ரவுடிதான் பட சமயத்தில் நடிகர் தனுஷ் சொன்னது பற்றி நடிகை ராதிகா வெளிப்படுத்தியுள்ளார்.

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகையான நயன்தாராவும், பிரபல இயக்குநர் விக்னேஷ் சிவனும் 2022-ஆம் ஆண்டு ஜூன் மாதம் 9-ஆம் தேதி திருமணம் செய்து கொண்டனர். சென்னை அருகே மாமல்லபுரத்தில் உள்ள தனியார் ரிசார்ட்டில் பிரமாண்டமாக நடந்த திருமணத்தில் முக்கியமான திரை பிரபலங்கள் மற்றும் அரசியல் பிரமுகர்கள் கலந்து கொண்டனர். திருமணத்தின் போது அது குறித்து வீடியோ வெளியாகாத நிலையில், திருமண நிகழ்வுடன் சேர்த்து, நயன்தாரா - விக்னேஷ் சிவனின் காதல் வாழ்க்கை, Nayanthara: Beyond the Fairytale என்ற பெயரில் ஆவணப்படமாக தயாரானது.

2 ஆண்டுகளுக்கு மேலாக இந்த ஆவணப்படம் வெளியாகாததற்கு, ‘நானும் ரவுடிதான்’ படத்தின் காட்சிகளை பயன்படுத்த, அந்த படத்தின் தயாரிப்பாளரும் நடிகருமான தனுஷ் அனுமதிக்கவில்லை என நயன்தாரா குற்றம்சாட்டியிருந்தார்.

மேலும், டிரெய்லரில் 3 நொடி காட்சியை பயன்படுத்தியதற்கு தனுஷ் 10 கோடி ரூபாய் இழப்பீடு கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளதாகவும் குறிப்பிட்டிருந்த நயன்தாரா, தனுஷை கடுமையாக விமர்சித்து அறிக்கை வெளியிட்டிருந்தார்.

இது திரையுலகிலும், ரசிகர்கள் மத்தியிலும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், நயன்தாராவின் பிறந்தநாளையொட்டி நள்ளிரவு 12 மணிக்கு நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் ஆவணப்படம் வெளியானது.

இதற்கிடையே, ஆவணப்படத்தில் நயன்தாராவின் வாழ்க்கை, அவர் சந்தித்த கஷ்டங்கள், சினிமா வாழ்க்கை, காதல், திருமணம் என அனைத்தும் விவரிக்கப்பட்டுள்ளது. அதேபோல், நயன்தாரா - விக்னேஷ் சிவன் காதல் மலர்ந்தது குறித்தும் பேசப்பட்டுள்ளது. எல்லோருக்கும் தெரிந்ததுபோல் ‘நானும் ரவுடிதான்’ படத்தின்போது தான் இருவருக்கும் காதல் மலர்ந்தது.

இந்தப் படத்தை வைத்து தான் தற்போது பிரச்சினை உருவெடுத்தது போல், இந்தப் படத்தின் ஷூட்டிங்கின் போது இருவரின் காதல் பற்றியும் தனுஷ் என்ன சொன்னார் என்பதை அப்படத்தில் நடித்த நடிகை ராதிகா வெளிப்படுத்தியுள்ளார்.

அதில், நயன்தாரா - விக்னேஷ் சிவன் காதல் பற்றி தன்னிடம் முதலில் தெரிவித்தது தனுஷ் தான் என்றும், இதை சொல்லும்போது “அக்கா உங்களுக்கு வெட்கம், மானம் எதாவது இருக்கானு” என என்னைப் பார்த்து தனுஷ் கேட்டார் என்றும் ராதிகா திருமண ஆவணப்படத்தில் கூறியுள்ளார்.

பின்னர் ‘என்ன சொல்கிறாய்’ எனக் கேட்டதுக்கு ‘‘விக்கியும், நயனும் ஒன்றாக வாழப்போகிறார்கள்’’ என தனுஷ் கூறினார் என்று ராதிகா மேலும் கூறினார்.

‘நானும் ரவுடிதான்’ படக்காட்சிகளை பயன்படுத்துவது தொடர்பாக தனுஷ் மற்றும் நயன்தாரா தம்பதி இடையே தற்போது மோதல் வெடித்துள்ள நிலையில், தனுஷ் தொடர்பாக ஆவணப்படத்தில் பேசப்பட்டிருப்பது சர்ச்சையை மேலும் அதிகரிக்குமோ என்ற அச்சத்தை எழுப்பியுள்ளது.

Ads
Recent Cinema News
Trending News
Recent News
Prev
Next