மதுர மக்களே ரெடியா? மாமதுரை திருவிழாவிற்கு தயாராகும் மதுரை மாநகரம்

do-you-know-when-the-mamadurai-festival-is-held-in-madurai-yta-gwi
  • Publisher : news18
  • Author : -
  • Last Update : 2024-07-21 13:58:00

பட்டி தொட்டி எங்கும் புகழ்ந்து பேசக்கூடிய நம்ம மதுரையில மாமதுரை திருவிழா என்ற ஒரு திருவிழா ஸ்டார்ட் ஆக போது.

அட அது என்ன மாமதுரை திருவிழா அப்படின்னு தானே கேக்குறீங்க?

“யங் இந்தியன்ஸ்” என்ற ஒரு அமைப்பின் சார்பாக வருகின்ற ஆகஸ்ட் 8ஆம் தேதியில் இருந்து 11ஆம் தேதி வரை ‘மாமதுரை விழா’ என்ற தலைப்பில் பிரம்மாண்டமான திருவிழா நடக்கப் போகுது.

இந்த திருவிழா மதுரையில எங்க நடக்க போது என்ன மாதிரியான விழால நடக்க போகுதுன்னு கேட்டீங்கன்னா?

மதுரையில் இருக்கக்கூடிய தமுக்கம் மைதானம், லட்சுமி சுந்தரம் மஹால், மகாத்மா பள்ளி, வண்டியூர் லேக் ஏரியா, மடிச்சியா அரங்கம், வைகைக் கரை பகுதிகள், காந்தி மியூசியம் போன்ற இடங்கள்ல பட்டம் விடும் திருவிழா, ஹெரிடேஜ் வாக், சைக்கிளிங், உணவுத் திருவிழா, ஆர்ட் திருவிழா, பிளாஷ் ஷாப் என்ற தலைப்பில் வியாபார சந்திப்பு, ஒரு லட்சம் மரக்கன்று நடும் திருவிழா போன்ற பல நிகழ்ச்சிகள் எல்லாம் இந்த இடங்களில் நடக்கப் போகுது. சொல்ல மறந்துட்டீங்க குறிப்பா இந்த மாமதுரை திருவிழாவில் டபுள் டக்கர் பஸ் திருவிழா நடக்க போகுது. இந்த டபுள் டக்கர் பஸ்ஸில் மதுரையையே சுத்தி பார்த்தா எப்படி இருக்கும்.

இதனை அடுத்து இந்த மாமதுர திருவிழாவிற்கு தயாராக கூடிய வகையில் மதுரை பெரியார் பேருந்து நிலையம் பகுதியில் மாமதுரை திருவிழாவிற்கு என்று மதுரையின் பேமஸான மீனாட்சியம்மன் கோவில், யானைமலை போன்ற இடங்கள் மற்றும் சித்திரை திருவிழாக்கள், புகைப்படங்கள் குறித்த கலர்ஃபுல்லான ஓவியங்கள் வரைய தொடங்கியுள்ளனர். இனிவரும் நாட்களில் காளவாசல், காந்தி மியூசியம், வண்டியூர் லேக் ஏரியா போன்ற பல்வேறு பகுதிகளில் ஓவியங்கள் வரைய உள்ளதாக கூறப்படுகின்றது.

இப்படி பரபரப்பா மதுரை மாநகர் முழுவதும் மாமதுரை திருவிழாவிற்கு தயாராகி வரக்கூடிய நிலையில எந்தெந்த திருவிழா, எந்தெந்த தேதிகளில், எந்தெந்த பகுதிகளில் நடைபெறும் என்பது குறித்த முழு தகவல்கள் இனி வரும் நாட்களில் தெரிவிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

Ads
Recent Cinema News
Trending News
Recent News
Prev
Next