'தி கோட்' படத்தில் விஜயின் காரில் 2026 CM என்ற பதிவெண்! - அந்த நம்பருக்கு அப்படி என்ன ஸ்பெஷல்?

cinema-2026-cm-symbolic-representation-in-goat-movie-makes-fans-happy
  • Publisher : news18
  • Author : -
  • Last Update : 2024-09-06 06:51:00

கோட் திரைப்படத்தில் விஜய் வரும் காரில் பதிவு எண் 2026 ஆம் ஆண்டில் அவர் முதல் முதலமைச்சர் என்ற வகையில் இடம்பெற்றுள்ளது ரசிகர்களை குதூகலத்தில் ஆழ்த்தி உள்ளது.

வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்த கோட் திரைப்படம் தற்போது வெளியாகி உள்ளது. இந்த திரைப்படத்தில் இடம்பெறும் காட்சியில் விஜய் வரும் கார் எண் தற்போது விவாத பொருளாக மாறி உள்ளது. அவரின் கார் எண் TN 07 CM 2026 என்று உள்ளது. இதை தற்போது விஜய் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

அதில் TN 07 என்பது வெங்கட் பிரபு தனக்கு பிடித்த கிரிக்கெட் வீரரான தோனியின் ஜெஸ்ஸி எண்னை பயன்படுத்தியுள்ளார். அதேபோல CM 2026 என்பதை விஜயின் அரசியலை குறிக்கும் வகையில் இடம் பிடிக்க செய்துள்ளார்.

தமிழகத்தின் 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெறுகிறது. இந்த நிலையில் விஜய் தன்னுடைய அரசியல் கட்சியான தமிழக வெற்றிக் கழகத்தை தொடங்கி அதற்கான பணிகளை செய்து வருகிறார்.

அவர் கட்சி தொடங்கிய பிறகு விஜய் நடிப்பில் வெளியாகும் முதல் படம் கோட் அந்த படத்தில் இந்த CM 2026 என்ற எண் இடம் பிடித்திருப்பதை தற்போது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

Ads
Recent Cinema News
Trending News
Recent News
Prev
Next